ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவின் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் தாரா - மாரி சீரியல் அப்டேட்

சூர்யாவின் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் தாரா - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

சூர்யாவின் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் தாரா மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் ஹாசினிடம் சூர்யா மாரியை தான் மனைவியா மனசாராய் ஏற்றுக்கொள்ளவில்லை மத்தபடி மாரியை பிடிக்கும் என்று சொல்ல அதை மாரி கேட்டு விட்டு தேவி போட்டோ முன்பு வேண்டுகிறாள்.

  அப்போது ஜெகதீஸ் அந்த பக்கம் வந்து மாரியிடம் நீ தயவு செய்து திருமணத்திற்கு ஒத்துக்காதே. நீ ஒத்துக்கொண்டால் கண்டிப்பா தாரா சூர்யாவுக்கு இன்னொரு திருமணம் செய்வாள் என்று சொல்லிவிட்டு போகிறார்.

  அடுத்து சூர்யா தூங்கிக் கொண்டிருக்க மறுநாள் காலை டைனிங் டேபிளில் சூர்யாவிடம் தாரா கல்யாணத்துக்கு சம்மதமா என்று கேட்க சூர்யா வேண்டாம் என்று சொல்ல தாரா நெஞ்சுவலி வந்து கீழே விழுகிறாள். தூக்கத்திலிருந்து சூர்யா எழுந்திருக்க அதை மாரி பார்த்து நீங்களே கஷ்டப்படுவீர்கள் நீங்கள் அத்தை சொல்வது போன்று இரண்டாம் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல சூர்யா ஷாக்காகிறான்.

  அப்படி செய்வது உனக்கு நான் செய்ற துரோகம் இல்லையா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் உங்களை காப்பாத்த வந்து இருக்கேன் இந்த வீட்ல ஓரமா நான் வேலைக்காரியா இருந்திருக்கேன் தாராளமா நீங்க கல்யாணத்துக்கு ஒத்துங்க என்று சொன்னவுடனே மாரி மற்றும் சூர்யா என இருவரும் பீல் பண்ணுகின்றனர்.

  Also read... மீண்டும் முட்டிக்கொள்ளும் மகேஸ்வரி மற்றும் அசீம் - வெளியானது ப்ரோமோ வீடியோ!

  மறுநாள் காலை தாரா சூர்யாவிடம் சம்மதமா என்று கேட்க சூரியா அமைதியா இருக்க அனைவரும் உன்னால் தான் மாரி சூர்யா இந்த கல்யாணத்துக்கு சம்மதம் என்று சொல்லல என சொல்ல தனக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கிறது. நான் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டேன் தாராளமாக நீங்க இரண்டாவது திருமணம் செய்யுங்கள் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv