முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தாராவுக்கு மரண பயத்தை காட்டிய தேவி - மாரி சீரியல் அப்டேட்

தாராவுக்கு மரண பயத்தை காட்டிய தேவி - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

தாராவுக்கு மரண பயத்தை காட்டிய தேவி, ஜாஸ்மினுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. மாரி பூஜை நல்லபடியாக செய்து முடித்த நிலையில் இன்றைய எபிசோடில் தேவி அம்மா மாரியின் முன் தோன்றி இந்த வீட்டோட அடுத்த தேவியம்மா நீ தான், அடுத்த வாரிசு நீ தான் என பாராட்டுகிறாள்.

மறுபக்கம் தாரா ரூமுக்குள் மாரிக்கிட்ட நான் ரொம்ப மோசமா தோத்து போயிட்டேன் இவ்வளவு பேர் இருந்தும் என்னால ஜெயிக்க முடியல, நான் எப்படி வெளியே தலை காட்டுவேன் என சொல்லி தன்னுடைய டீமுடன் கோபப்படுகிறாள். அனைவரையும் வெளியே அனுப்பி கதவை மூட திடீரென தாராவின் ரூமில் கட்டில் ஆடுகிறது. காத்து வேகமாக அடிக்க முன்னாடி இருக்கும் கண்ணாடியில் தேவியம்மா தோன்றி என்னை சூழ்ச்சி செய்து கொன்றது போல மாரியை ஒன்னும் செய்ய முடியாது. அவளை உன்னால அழிக்க முடியாது என சொல்ல தாரா நிச்சயமா ஒரு நாள் மாரி மற்றும் சூர்யாவை கொன்று இந்த சொத்துக்களை அடைவேன் என சொல்கிறாள்.

இதனால் ஆவேசப்படும் தேவி அம்மா தாராவின் கழுத்தை நெரித்து மரண பயத்தை காட்டி எச்சரித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். அடுத்து மாரி வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்க அங்கு வரும் சூர்யா உனக்கு காலில் அடிபட்டு இருக்கு, நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம் என ரூமுக்கு தூக்கி சென்று படுக்க வைத்து மாரியின் காலுக்கு மருந்து போட்டு விடுகிறான்.

மேலும் மாரியிடம் என்னுடைய அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன் அவங்க தான் எனக்கு சின்ன வயசுல சாப்பாடு கொடுத்து தூங்க வைப்பாங்க என பீல் பண்ணுகிறான். மறுபக்கம் ஜாஸ்மின் தூங்கிக் கொண்டிருக்கும் ரூமில் திடீரென ஏசி கூலிங் அதிகமாக்கிக் கொண்டே போகிறது. ரிமோட்டை எடுத்து குறைக்க முயன்றும் குறைக்க முடியாமல் இருக்கிறது.

ஜன்னல் மற்றும் கதவை திறக்க முயற்சி செய்ய எதுவும் திறக்க முடியாமல் இருக்க ஜாஸ்மின் யாராவது கதவைத் திறங்க என சத்தம் போட யாரும் வராமல் இருக்கின்றனர். அந்த நேரத்தில் ஜாஸ்மின் முன்னாடி தேவி அம்மா தோன்றி நான்தான் சூர்யாவோட அம்மா தேவி என பேச ஜாஸ்மின் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv