முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மீண்டும் வீட்டுக்குள் வந்த தேவி - மாரி சீரியல் அப்டேட்!

மீண்டும் வீட்டுக்குள் வந்த தேவி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மீண்டும் வீட்டுக்குள் வந்த தேவி, தாராவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாரி சாமி சிலையை தேடி போய் பூசாரி சொன்ன இடத்தில் தோண்ட சிலை கிடைக்க இதை பார்த்த சங்கரபாண்டி எலும்பு கூடு தானே வச்சோம் என பார்க்க அவனுக்கு பின்னால் அந்த எலும்பு கூடு இருக்க அவன் அஞ்சி ஓடுகிறான்.

மறுபக்கம் ஜாஸ்மின், ஸ்ரீஜா உள்ளிட்டோர் தாராவிடம் சங்கரபாண்டி சிலையை மாற்ற போயுள்ள விஷயத்தை சொல்ல அப்போது அங்கு வரும் ஜெகதீஷ் மாரிக்கு சிலை கிடைத்து விட்டது, வீட்டுக்கு வருகிறாள் என சொல்ல தாரா அதிர்ச்சி அடைகிறாள்.

அடுத்து சிலையுடன் வரும் மாரியை ஹாசினி ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வர சிலையை பூஜையறையில் வைத்து பூஜை செய்ய முடிவெடுக்கிறார்கள்‌. இது தான் நம்முடைய குலதெய்வம் மாடத்தி அம்மன் என மாரி சொல்ல ஜெகதீஷ் ஆமாம் இந்த பெயரை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் என சொல்கிறார்.

மறுப்பக்கம் தாரா என்ன சொல்ல போறாளோ என சங்கரபாண்டி பயந்து கொண்டே வீட்டுக்கு வர வெளியே வரும் தாரா அவனை பளார் என அறைகிறாள். பிறகு சங்கரபாண்டி நடந்த விஷயங்களை சொல்கிறாள்.

அடுத்து மாரி தேவியம்மா முன்பு விளக்கேற்ற இதுவரை எரியாமல் இருந்த விளக்கு நல்லபடி எரிகிறது. தேவியும் உள்ளே வந்து மாரி முன்பு தோன்றி நன்றி சொல்கிறாள். நான் குல தெய்வத்தை தேடிட்டு தான் இருந்தேன், ஆனால் நீ அதை கண்டுபிடிச்சிட்ட என சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv