முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாரிக்கு கரண்ட் ஷாக்... தாராவுக்கு நேர்ந்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்!

மாரிக்கு கரண்ட் ஷாக்... தாராவுக்கு நேர்ந்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரிக்கு வைத்த கரண்ட் ஷாக், கடைசியில் தாராவுக்கு நேர்ந்த அதிர்ச்சி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாரி நடக்கும் வழியில் பூக்களுக்கு இடையே கண்ணாடி துண்டுகள் வைத்து அவளது காலை கிழிக்க தாராவின் குரூப் ஏற்பாடு செய்திருந்த நிலையில் சூர்யா மாரியின் காலில் இருந்து கண்ணாடி துண்டுகளை எடுத்து துணியை கட்டி நடக்க உதவி செய்கிறான்.

அதன் பிறகு மாரி செல்லும் வழியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் ரௌடிகள் மின்சாரம் பாய்ச்ச மாரி கால் வைக்கும் போது கரண்ட் ஆஃப் ஆகி ஷாக் அடிக்காமல் போகிறது. பிறகு ரவுடிகள் எப்படி ஷாக் அடிக்காமல் போனது என சோதனை செய்வதற்காக காலை விட அப்போது மீண்டும் கரண்ட் வந்துவிட அவர்களுக்கு ஷாக் அடிக்கிறது.

அதன் பிறகு கோவிலில் மாரி நல்லபடியாக பூஜையை செய்து முடித்து பூசாரியை சென்று சந்திக்க அவர் ஒரு தேங்காயை கொடுத்து இந்த தேங்காய் உனக்கு வழிகாட்டும் என சொல்லி உருட்டி விட தேங்காய் காட்டும் வழியில் தோண்டி பார்த்தால் சிலை கிடைக்கும் என சொல்கிறார்.

இதைப் பார்த்த தாரா டீம் முன்கூட்டியே அந்த இடத்திற்கு சென்று தோண்டி பார்க்க அங்கு இருக்கும் சிலையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக எலும்புக்கூடை வைத்து புதைக்கின்றனர். பிறகு மாரி அந்த இடத்தை கண்டுபிடித்து தோண்ட எலும்புக்கூடு கிடைக்கும் என நினைத்தால் சிலை கிடைக்கிறது.

இதனால் சங்கர பாண்டி உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்து பார்க்க எலும்புக்கூடு சங்கர பாண்டியை கட்டி பிடித்தவாறு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv