முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நிறைவேறிய வேண்டுதல்.. மாரிக்கு உதவ வந்த கடவுள் கருப்பசாமி - மாரி சீரியல் அப்டேட்!

நிறைவேறிய வேண்டுதல்.. மாரிக்கு உதவ வந்த கடவுள் கருப்பசாமி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரிக்கு உதவ வந்த கருப்பசாமி, தாராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நீலி சூர்யாவை கட்டுபடுத்தி கட்டி போட்ட நிலையில் ராசாத்தி நீலியை மரத்தில் ஆணி அடித்து கட்டுபடுத்தி சூர்யாவை மீட்க முயற்சி செய்கிறாள்.

அதற்குள் மந்திரவாதி ஒரு பூஜையை செய்து நீலியின் சக்தியை அதிகரிக்க செய்ய நீலி ராசாத்தியை தாக்க இதை பார்த்து தாரா தரப்பு சந்தோஷமடைகிறது.

மறுபக்கம் மாரி கருப்பசாமியை வேண்ட நீலி முன் தோன்றும் கருப்பசாமி நீலியை அடித்து ஓட விட்டு சூர்யாவை பழைய நிலைக்கு கொண்டு வர அவன் வீடு வந்து சேர்கிறான்.

இதனால் அதிர்ச்சி அடையும் தாரா ஜாஸ்மினுக்கு போன் போட்டு என்னாச்சு என கேட்க அவள் நடந்த விஷயங்களை சொல்கிறாள். மேலும் இன்னொரு பூஜையை செய்து மாரியின் பூஜை கெடுக்க திட்டம் போட அங்கு வரும் கருப்பசாமி அவர்களையும் சாட்டையால் அடித்து ஓட விடுகிறார்.

இதனால் மாரி பூஜையை நல்லபடியாக செய்து முடிக்க சாமி சிலையில் இருக்கும் மூக்குத்தி வெளிச்சம் பட்டு தாமரை மொட்டு மலர்கிறது.

பிறகு தனக்கு உதவிய ராசாத்திக்கு மாரி நன்றி கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv