முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குடோனுக்குள் மயங்கிய சூர்யா.. காப்பாற்ற வந்த ராசாத்தி - மாரி சீரியல் அப்டேட்!

குடோனுக்குள் மயங்கிய சூர்யா.. காப்பாற்ற வந்த ராசாத்தி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

சூர்யாவை காப்பாற்ற வந்த ராசாத்தி, மந்திரவாதிக்கு காத்திருந்த அதிர்ச்சி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சூர்யாவை மை தடவி மயங்கிய நீலி அவனை ஒரு குடோனுக்கு அழைத்து சென்று ஒரு பூவை நுகர வைக்க சூர்யா மயக்கம் ஆகிறான். இதை மந்திரவாதியுடன் இருந்து பார்க்கும் ஸ்ரீஜா, ஜாஸ்மின், சங்கரபாண்டி ஆகியோர் சந்தோஷம் அடைகிறார்கள்.

இந்த பக்கம் சூர்யா வராத காரணத்தால் என்ன செய்வது என தெரியாமல் மாரி தவிக்க ராசாத்தி பூஜையில் கவனம் செலுத்து சூர்யாவை நான் தேடி செல்கிறேன் என கிளம்பி செல்கிறாள்.

ஒரு வழியாக சூர்யா இருக்கும் குடோனுக்கு வர அங்கு நீலி சூர்யாவை காப்பாற்ற விடாமல் தடுக்க ராசாத்தி, நீலி இடையே மோதல் உருவாகிறது. ஒரு கட்டத்தில் ராசாத்தி நீலியை தரதரவென இழுத்து சென்று ஒரு மரத்தில் வைத்து ஆணி அடித்து நீலியை கட்டுபாட்டுக்குள் கொண்டு வருகிறாள்.

அடுத்து சூர்யாவின் கட்டுக்களை கழட்டி அவனை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்ய சூர்யா மயக்கத்திலேயே இருக்கிறான்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv