முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தாராவின் சூழ்ச்சியால் மாரிக்கு வந்த காய்ச்சல் - 'மாரி' சீரியல் அப்டேட்

தாராவின் சூழ்ச்சியால் மாரிக்கு வந்த காய்ச்சல் - 'மாரி' சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

தாராவின் சூழ்ச்சியால் மாரிக்கு வந்த காய்ச்சல், பூஜைக்கு வந்த சிக்கல் என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாரியின் பூஜையை கெடுக்க சங்கர பாண்டி சிக்கன் சாப்பிட முயற்சித்த நிலையில் கருப்புசாமி அவனை சாட்டையால் அடித்து துரத்த அவன் கையில் சிக்கன் பீஸ் உடன் வெளியே வர அனைவரும் பார்த்து திட்ட தாரா அவனை பளார் என அறைந்து இனிமேல் பூஜையை கெடுக்கும்படி ஏதாவது செய்தால் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என எச்சரித்து நாடகம் போடுகிறாள்.

அதன் பிறகு தாராவின் குரூப் ஒன்று சேர்ந்து பூஜையை கெடுக்க என்ன செய்வது என யோசிக்க மீண்டும் மந்திரவாதிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவர் என்னுடைய சிஷ்யனிடம் ஒரு மருந்தை கொடுத்து அனுப்புகிறேன் அதை மாரிக்கு பாலில் கலந்து கொடுங்கள் உடனே காய்ச்சல் வரும் இதனால் பூஜை தடைப்படும் என சொல்கிறார்.

அதேபோல் மருந்தும் தாராவின் கைக்கு வந்து சேர இதை எப்படி மாரிக்கு கொடுப்பது என யோசிக்க எல்லோரும் கருப்புசாமிக்கு பயந்து கொடுக்க தயங்க தாரா நானே கொடுக்கிறேன் என சொல்லி பாலில் கலந்து சூர்யாவிடம் கொண்டு சென்று இதை மாரிக்கு கொடு, அவள் பூஜை காரணமாக எதுவும் சாப்பிடாமல் இருக்கிறாள் என சொல்லி அனுப்ப சூர்யாவும் அந்தப் பாலை கொடுக்க முதலில் வேண்டாம் என மறுக்கும் மாரி பிறகு சூர்யாவுக்காக குடிக்கிறாள். அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் மாரிக்கு மயக்கம் வந்து கீழே விழ காய்ச்சல் கொதிக்கிறது. உடனடியாக ஜெகதீஷ் டாக்டருக்கு போன் போட்டு வீட்டுக்கு வர சொல்ல தாரா டாக்டரை வழிமறித்து மாரிக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதால் ஹாஸ்பிடலில் வைத்து தான் சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்ல சொல்கிறாள்.

டாக்டரும் அதே போல் சொல்ல எல்லோரும் மாரியை மருத்துவமனையில் அட்மிட் செய்ய முடிவெடுக்க மாரி இந்த பூஜையை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாள். இதனால் ராசாத்தி கடவுளிடம் மாரிக்கு உதவி செய்யுமாறு வேண்ட குழந்தை ஒன்று ஜெகதீஷ் வீட்டின் முன்னாள் வந்து மாரியை பார்க்க வேண்டும் என சொல்ல மாரிக்கு காய்ச்சல் என சொல்கின்றனர்.

மேலும் அந்தப் பெண் மேல் மருவத்தூரில் இருந்து வந்திருப்பதாக சொல்கிறாள். கடைசியில் தான் அது கடவுள் என தெரிய வருகிறது. மாரி குணப்படுத்த கையில் தீர்த்தத்துடன் வந்திருக்கிறார்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv