ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவின் திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்

சூர்யாவின் திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

புற்றுக்குள் விழுந்த தாலி, காணாமல் போன சாமி சிலை, சூர்யாவின் திருமணத்தில் காத்திருந்த அதிர்ச்சி அடுத்து நடக்கப்போவது என்ன என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜாஸ்மின் சூரியா கல்யாணத்தில் ஐயர் தாலியை வைத்து பூஜை செய்ய வர சாமி காணாமல் போக அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

அடுத்து இப்ப எப்படி சாமி கிட்ட தாலியை வைத்து ஆசிர்வாதம் வாங்க முடியும் என ஐயர் கேட்க திருமணத்தில் மனசு தான் முக்கியம் சாமி முக்கியமில்ல அதனால சாமி இல்லனாலும் பரவால்ல நீங்க வந்து தாலியை கொடுங்க சூர்யா என் கழுத்தில் கட்டட்டும் என ஜாஸ்மின் சொல்கிறாள்.

தாராவும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். மேலும் சூர்யாவை சம்மதிக்க வைத்து மணமேடையில் அமர வைத்து தாலியை கொடுக்கிறாள். அப்போது திடீரென புத்தில் இருந்து பாம்பு வெளியே வர அனைவரும் பாம்பு பாம்பு என்று கத்தி கலைந்து ஓடுகின்றனர்.

இந்த கூட்டத்தில் இடிபட சூரியா கையில் இருந்த தாலி புத்துக்குள் விழுந்து விடுகிறது. இதனால் அனைவரும் புற்றை பார்த்து யார் தாலி எடுப்பது என்று தெரியாமல் முழிக்க தாரா சங்கரபாண்டியை எடுக்க சொல்ல சங்கரபாண்டி பயப்படுகிறான்.

அடுத்து ஸ்ரீஜாவை எடுக்க சொல்ல ஸ்ரீஜாவும் பயப்பட இறுதியாக ஜாஸ்மின் எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல நான் கையை விட்டு இந்த தாலி எடுக்கிறேன், சூர்யா என் கழுத்துல தாலி கட்டி ஆகணும் அதனால நான் தாலி எடுக்குற என்று சொல்கிறாள்.

அனைவரும் வேண்டாம் என தடுக்க அதையும் மீறி ஜாஸ்மின் பாம்பு புத்துக்குள் கையை விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... 'இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம்' பிக்பாஸ் டைட்டில் வென்ற பின் உருக்கமாக பதிவிட்ட அசிம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv