ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா செல்லும் காரை தடுத்து நிறுத்தும் மாரி அவனை வேறொரு காரில் மாற்றி ஆபீசுக்கு அனுப்பி வைக்கிறாள். இதனால் சூர்யா வருவதாக நினைத்து ஒயிட் கலர் கார்காக காத்திருந்த ரவுடிகள் அந்த காரில் சூர்யா இல்லாததால் ஏமாற்றம் அடைகின்றனர்.
பிறகு அரவிந்துக்கு போன் செய்து விசாரிக்க அரவிந்த் இல்லையே ஒயிட் கலர் கார்ல தானே சூர்யா போனான் என்று சொல்ல சார் செக் பண்ணி பார்த்துவிட்டேன் இல்லை என்று ரவுடிகள் சொல்ல, சூர்யா ஆபீசுக்கு வருகிறார்.
இதனால் சரி விடுங்க சாயங்காலம் ஆபீஸ் முடிஞ்சு அதே ஒயிட் கலர் கார்ல தான் வருவான் அப்ப அவன காலி பண்ணிடு என்று சொல்ல இதைக் கேட்டு மாரி ஷாக்காகிறாள்.
மதியம் சூரியாவுக்கு சாப்பாடு ரெடி பண்ணி ஆபீஸ் கொண்டு போய் சூர்யாவை சாப்பிட சொல்கிறாள். சூர்யா சாப்பிட்ட பின்னர் நீங்க வரும்போது ஒயிட் கலர் காரில் வர வேண்டாம் பிரவுன் கலர் காரில் வரவேண்டாம் என்று சொல்ல அவன் எதற்கு என்று கேட்க காரணம் இல்லாமல் சொல்ல மாட்டேன் தயவு செய்து நான் சொன்னபடி கேளுங்கள் என்று சொல்ல அதே மாதிரி ஆபீஸ் முடிஞ்சு சூர்யா, மாரி சொன்னது போல ஒயிட் கலர் ஏறாமல் பிரவுன் கலர் காரில் வருகிறான்.
பின்னர் ரவுடிகள் சூர்யா ஒயிட் கலர் காரில் வருவான் என்று காத்திருக்க ஒயிட் கலர் கார் வந்ததும் மடக்கி விசாரிக்க அங்கு சூர்யா இல்லாமல் இருக்க அதை பார்த்து ஷாக்காகி அரவிந்துக்கு போன் பண்ணி சொல்ல அரவிந்த் வெளியே எட்டிப் பார்க்க சூர்யா பிரவுன் கலர் காரில் வந்து இறங்குகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Also read... கமலின் கிளாஸ் மற்றும் மாஸ் பொங்கல் படங்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv