ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவை கொல்ல அரவிந்த் போட்ட திட்டம்... மாரி எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்

சூர்யாவை கொல்ல அரவிந்த் போட்ட திட்டம்... மாரி எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

சூர்யாவை கொல்ல அரவிந்த் போட்ட திட்டம், மாரி எடுத்த முடிவு அடுத்து நடக்கப்போவது என்ன என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாரிக்கு தூக்கத்தில் முன்னறிவிப்பு ஏற்படுகிறது. அதில் அரவிந்த் சூர்யாவை கத்தியால் குத்த வருவது போன்று தெரிய தூக்கத்திலிருந்து மாரி ஹஸ்பன்ட் சார் என்று கத்த சூர்யா எழுந்து மாரியிடம் என்னவென்று கேட்க மாரி ஒன்றும் இல்லை சமாளித்து படுக்கிறாள்.

அடுத்து அரவிந்த் தன் நண்பர்களுடன் சரக்கடித்து கொண்டிருக்க நண்பர்கள் அவனை கடைசி வரைக்கும் சொத்து கிடைக்காமல் இந்த மாதிரி தான் இருப்ப என்று கிண்டல் பண்ண அரவிந்த் பாட்டிலை உடைத்து கூடிய விரைவில் அந்த சூர்யாவை கொன்னு சொத்த என் பேருக்கு வர வச்சு காட்டுறேன் என்று சொல்கிறான்.

பிறகு மாரி தேவி அம்மாவிடம் சென்று வேண்டுவது அரவிந்த் சார் தாரா அம்மாவுடைய மூத்த பையன், ஹாசினி அக்காவுடைய புருஷன் எப்படி நான் இந்த விஷயத்தை சொல்ல போறேன் என்று வேண்டியபடி இருக்க அப்போது போதையில் வரும் அரவிந்த் டைனிங் டேபிள் அமர்ந்து கத்தி எடுத்து பார்க்க அதை மாறி பார்க்கிறாள்‌.

மறுநாள் காலை சூர்யா ஆபீஸ் கிளம்ப சூர்யாவிடம் எப்படி சொல்வது என்று மாரி யோசித்தபடி பிறகு உடனடியாக ஹாசினியிடம் சொல்லலாம் என்று கீழே வர ஹாசினி இல்லாமல் இருக்கிறாள். இதனால் ஹாசினியை தேட அப்போது ஹாசினியும் அரவிந்தும் கோயிலில் இருந்து வருகின்றனர்.

அடுத்து சுஜாதாவும் பார்வதியும் பேப்பர் படித்துக் கொண்டிருக்க அதில் சொத்துக்காக ஒருவன் கொலை செய்த விஷயத்தை படிக்க அதை கேட்கும் மாரி சூர்யாவிடம் நாம் அரவிந்துக்கு சொத்தில் ஏதாவது கொடுக்கலாம் அப்போது தான் அவருக்கு பொறுப்பு வரும் என்று சொல்ல சூர்யா இதை நான் முடிவு செய்ய முடியாது, அப்பா தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்கிறான்.

அதனை தொடர்ந்து சூர்யாவும் மாரியும் ஜெகதீஷிடம் சென்று சொத்தில் ஒரு பகுதியை நாம் அரவிந்துக்கு கொடுக்கலாம் என்று சொல்ல ஜெகதீஷ் முடியாது என்று சொல்கிறார். இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv