முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / எச்சரித்த டாக்டரை கொல்ல துணிந்த ஜாஸ்மின் - ’மாரி’ சீரியல் அப்டேட்.!

எச்சரித்த டாக்டரை கொல்ல துணிந்த ஜாஸ்மின் - ’மாரி’ சீரியல் அப்டேட்.!

மாரி சீரியல்

மாரி சீரியல்

எச்சரித்த டாக்டரை கொல்ல துணிந்த ஜாஸ்மின், சூர்யாவுக்கு  உண்மை தெரியவருமா? என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் டாக்டர் ஜாஸ்மீனை அழைத்து சூர்யா குடும்பத்திடம் அபார்ஷன் செய்த விஷயத்தை சொல்லுமாறு சொல்ல ஜாஸ்மின் அவர்களிடம் உண்மையை சொல்ல கால அவகாசம் கேட்கிறார்.

அடுத்து சூர்யா பால் குடிக்கும் போது பாலில் சர்க்கரை இல்லை என சொல்ல மாரி அதை குடித்து பார்த்து சர்க்கரை இருக்கிறது என சொல்ல மீண்டும் சூர்யா பாலை வாங்கி குடித்து சர்க்கரை இல்லை என சொல்ல இருவரும் மாறி மாறி பாலை குடிக்கின்றனர். இப்படி இருவருக்கும் இடையே அன்னோன்யம் அதிகரிக்கிறது.

மறுபக்கம் டாக்டர் மீண்டும் ஜாஸ்மினை அழைத்து உண்மையை சொல்லி விட்டாயா என கேட்க ஜாஸ்மின் உங்களிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறாள். மறுநாள் ஜாஸ்மின் டாக்டரை ஹாஸ்பிடல் சென்று சந்தித்து அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்ய டாக்டர் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இனி ஜாஸ்மின் உண்மையை சொல்ல மாட்டாள் என அறிந்து கொண்ட டாக்டர் சூர்யாவிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல வேண்டும் என போன் போட்டு ஹாஸ்பிடலுக்கு வர சொல்கிறார். சூர்யாவும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வந்து விடுகிறான்.

இதற்கிடையில் டாக்டரை சமாதானம் செய்ய முயற்சி செய்யும் ஜாஸ்மின் அவரிடம் தனியாக பேச வேண்டும் என மாடியின் மேலே அழைத்துச் சென்று காலில் விழுந்து கெஞ்சுவது போல நடித்து அவரது காலை இழுத்து கீழே தள்ளி விடுகிறாள். இதை சூர்யா பார்த்து அதிர்ச்சி அடைகிறான். மேலும் கீழே விழுந்த டாக்டர் சூர்யாவிடம் ஏதோ விஷயத்தை சொல்ல வர கடைசியில் அவரால் சொல்ல முடியாமல் போகிறது. இதனால் சூர்யா மிகவும் குழப்பம் அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv