முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாரியிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்ட தாரா - மாரி சீரியல் அப்டேட்!

மாரியிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்ட தாரா - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரியிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போட்ட தாராவிற்கு காத்திருந்த அதிர்ச்சி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாரி தேவி கெட்டப்பில் வந்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் பணத்தை எடுக்க பேங்கிற்கு செல்கிறாள். இதை சாதகமாக பயன்படுத்தி மாரியிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து அவளுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என தாராவும் சங்கரபாண்டியும் திட்டமிடுகின்றனர்.

அடுத்து பேங்கிற்கு போகும் மாரி மேனேஜரை சந்தித்து பணத்தை எடுத்து தனது அலுவலக மேனேஜரிடம் கொடுத்து நீங்க பணத்துடன் போங்க, பின்னாடி தான் வருவதாக சொல்லி அனுப்பி தனது கையில் வெறும் பெட்டியை எடுத்து செல்கிறாள். சங்கரபாண்டியின் அடியாள் மாரி கையில் தான் பணம் இருக்கும் என நினைத்து அவளை திசைதிருப்பி அவளிடம் இருந்த அந்த பெட்டியை களவாடி செல்கிறான். ஆபிஸ்க்கு போன மாரி எல்லோருக்கும் போனஸ் கொடுத்து விட்டு வீட்டுக்கு வருகிறாள்.

அவளிடம் தாரா என்ன பணம் காணாமல் போய் விட்டதாக கேள்வி பட்டேன் என கேட்க மாரி காணாமல் போனது காலி பெட்டி என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். பண விஷயத்தில் தாத்தா சொன்ன ஐடியாவை பின்பற்றிய விஷயத்தை மாரி போட்டுடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv