ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தேவியை வரவைக்க பூஜையை தொடங்கிய மாரி - மாரி சீரியல் அப்டேட்!

தேவியை வரவைக்க பூஜையை தொடங்கிய மாரி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

தேவியை வரவைக்க பூஜையை தொடங்கிய மாரி, தாரா செய்யும் சூழ்ச்சி என மாரி சீரியலில் நடக்க போவது என்ன இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா வீட்டில் பூஜைகளுக்கு ரெடி செய்து மாரி பூஜை செய்ய ரெடியா இருக்கிறாள்.  ஜாஸ்மின் தேவியம்மா வர மாட்டாங்க என்று கிண்டல் செய்ய மாரி கண்டிப்பாக வருவாக என்று கண்ணாடியை காட்டுகிறாள். இந்த கண்ணாடியில் நான் கடவுளிடம் வேண்டி பூஜை செய்தால் இந்த கண்ணாடியில் தேவி அம்மா தெரிவாங்க என்று சொல்லி கண்ணாடியை பூஜை ரூம் எடுத்துச் சென்று வழிபடுகிறாள்.

அடுத்து தாரா ஒருவேளை தேவியம்மா வந்துட்டாங்கனா நாம தோத்துருவோம் என்று நினைத்துக் கொண்டு சங்கரபாண்டியன் அழைத்து துப்பாக்கியை கொடுக்கிறாள். ஒருவேளை கண்ணாடியில் தேவியமா தெரிஞ்சாகனா இந்த கண்ணாடியை துப்பாக்கியால சுட்டு தூக்கணும் என்று சொல்ல சங்கர பாண்டியன் சரி என்று துப்பாக்கியை வாங்கிக்கொண்டு மேலே போய் காத்திருக்கிறான்.

Also read... வாரிசு.. துணிவு? யார் பேனர் பெருசு? போட்டி போட்டுக்கொண்டு பேனர் வைத்த விஜய்- அஜித் ரசிகர்கள்!

அடுத்து மாரி பூஜையை ஆரம்பிக்க அம்மனுக்கு பூஜை செய்து பாட்டு பாட ஆரம்பித்து உணர்ச்சிவசமாக பாட்டு பாட சங்கரபாண்டி துப்பாக்கியுடன் காத்திருக்க பாட்டு முடிவில் இறுதியில் காற்று வீச புயல் ஏற்பட அனைவரும் கண்ணாடியை பார்த்தபடி இருக்க தேவி மாடியில் இருந்து மெல்ல மெல்ல நடந்து வருகிறார். சங்கர பாண்டி உட்பட அனைவரும் கண்ணாடியை பார்த்தபடி இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv