ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தேவியை கொன்றது யார் என மாரிக்கு தெரிய வரும் ரகசியம் - மாரி சீரியல் அப்டேட்

தேவியை கொன்றது யார் என மாரிக்கு தெரிய வரும் ரகசியம் - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

தேவியை கொன்றது யார் என மாரிக்கு தெரிய வரும் ரகசியம், அடுத்து நடந்தது என்ன என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் மாரியை காப்பாற்றிய சூர்யா ஆஸ்பத்திரியில் டாக்டரிடம் காண்பித்து விட்டு வீட்டிற்கு அழைத்து வர சூர்யா மாரி ஒன்றாக வருவதைப் பார்த்து தாரா ஜாஸ்மின் என இருவரும் அதிர்ச்சியாகின்றனர்.

அடுத்து சூர்யா நடந்த விஷயத்தை வீட்டில் சொல்லி மாரியை  தூக்கிக்கொண்டு மேலே செல்ல ரூமில் ஏன் வரவில்லை என மாரி கேட்க சூர்யா நான் தான் வரவில்லை என்றால் நீ வீட்டுக்கு வர வேண்டியது தானே என்று சொல்ல நீங்க சொல்லாம நான் எப்படி வர முடியும் நீங்க சொல்லுங்க என்று சொல்ல சரி போனாவது பண்ணி இருக்கலாம்ல என கேட்க மாரி தன்னிடம் போன் எல்லாம் இல்ல என்று சொல்ல சூர்யா பீல் செய்கிறான்.

பிறகு கீழே தாரா, ஜாஸ்மின், சங்கர பாண்டி என மூவரும் சூர்யா மாரியுடன் ரொம்ப நெருக்கமாவது பற்றி பேசிக் கொண்டிருக்க மறுநாள் காலை விக்ரம் ஹாசினியை பார்க்க வரும்போது மாரியிடம் பேசிக் கொள்கிறாள். அப்போது மாரி விக்ரமை தனியாக அழைத்துக் கொண்டு தேவி அம்மாவை யார் கொன்னது என்று கேட்க விக்ரம் யார் கொன்னாங்க எனக்கு தெரியல என சொல்கிறான்.

அதோடு 25 வருஷத்துக்கு முன்னாடி தேவியம்மா ஒரு மியூசிக் பாக்ஸ்ல ஒரு சீக்கிரட்டை மறச்சு வச்சுருக்காங்க சூர்யாவுக்காக நாம மட்டும் அந்த மியூசிக் பாக்ஸ் இந்த வீட்ல எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சி எடுத்ததா கண்டிப்பா தேவி அம்மாவை கொலை பண்ணவங்களையும் அதே சமயம் சூர்யாவை கொல்ல வரவங்களும் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்கிறார்.

மேலும் அதுக்கு நீ தான் உதவி பண்ணனும் இந்த வீட்ல இருக்குற அந்த மியூசிக் பாக்ஸ் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்ல இதை சங்கர பாண்டி கேட்க முயற்சி செய்வது ஆனால் கேட்க முடியாமல் போகிறது. அடுத்து டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க மியூசிக் பாக்ஸில் ஏதோ ஒன்று விழுந்து சத்தம் போட ஆரம்பிக்க அது ஒரு இசையை எழுப்புகிறது அந்த இசையை கேட்டவுடன் தாராவிற்கு மயக்கம், கை, கால் நடுக்கம் எல்லாம் வருகிறது.

Also read... WATCH - நடுவானில் பறந்த அஜித் பட பேனர்.. விமானத்தில் இருந்து குதித்து துணிவு பட விளம்பரம்.. மாஸ் காட்டும் படக்குழு!

அடுத்து அனைவரும் மகிழ்ச்சியாக பார்க்க இறுதியில் தாரா மயக்கம் போட்டு விழுகிறாள். டாக்டர் வந்து செக் செய்து ஒன்னும் இல்லை என்று சொல்லிப் போக அவர்கள் சென்ற பின் தாரா எழுந்து அந்த மியூசிக் பாக்ஸை கண்டுபிடிக்கணும் இல்லன்னா அவ்வளவுதான் என்று புலம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv