ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவால் தாராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்!

சூர்யாவால் தாராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

வீட்டுக்கு வராத மாரி, தாராவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, சூர்யா எடுத்த முடிவு என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் மாரி துணிக்கடையில் லிப்டில் மாட்டிக் கொண்டிருக்க சூர்யா கீழே வாட்ச்மேனுடன் விசாரித்து வாட்ச்மேன் அப்படிப்பட்ட யாரும் நான் பார்க்கவில்லை சார் ஒரு வேளை வீட்டுக்கு கூட போய் இருக்கலாம் நீங்க வீட்ல போய் பாருங்க என்று சொல்கிறார்.

மறுபக்கம் தாரா வீட்டில் நம்பூதிரியை வைத்து பூஜை செய்து கொண்டிருக்க சூர்யாவுக்காக காத்திருக்க சூர்யா வருகிறது. அடுத்து சூர்யா வந்தவுடன் பிரியா மாரி எங்கே என்று கேட்க மாரி வீட்டுக்கு வரலையா என்று சூர்யா கேட்க வரவில்லை என்று சொல்ல உடனே ஸ்ரீஜா இல்ல கோவிலுக்கு எங்கேயாவது போயிருப்பானு சொல்கிறாள்.

உடனே தாரா வந்து பூஜையில் சூர்யாவை அமர வைத்து நம்பூதிரி வந்து துணி கொடுக்க அதை மாற்றி வர மேலே போக அங்கு சூர்யாவிடம் மனசாட்சி தோன்றி ஒரு மனைவியை விட்டுட்டு வந்து பூஜையில் உட்கார்ந்து இருக்கே என்று கேட்க அதற்குள் தாரா அவனை அழைத்து சென்று பூஜையில் அமர வைக்கிறாள்.

சூர்யாவுக்கு மாரி யோசனையாக இருக்க அவன் பாதியில் எழுந்து இதோ நான் வந்து விடுவேன் என்று சொல்லி மாரியை தேடி கிளம்பி செல்ல தாரா, ஸ்ரீஜா, ஜாஸ்மின் அப்செட்டாகின்றனர்‌. மாரியை ரோட்டில் பல இடங்களில் தேடுகிறான். அடுத்து கோயிலில் போய் தேட ரோட்டில் வரும்போது ஒரு கர்ப்பிணி பெண் வலியால் துடிக்க அவளை கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்க்கிறான்.

Also read... 2022-ம் ஆண்டு வெளியான டாப் 10 த்ரில்லர் படங்கள்

பின்பு சாமியிடம் சென்று எப்படியாவது மாரி எங்கே இருக்கானு காட்டு என்று சொல்ல அப்போது மாரி சொன்ன ஃப்ளாஷ் பேக் உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் நீங்க வர வரைக்கும் நான் இங்கே இருக்கேன்னு சொன்ன வார்த்தை சூர்யாவுக்கு தெரிந்து துணிகடையை நோக்கி புறப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv