ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

லிஃப்ட்டில் சிக்கிக் கொள்ளும் மாரி - மாரி சீரியல் அப்டேட்!

லிஃப்ட்டில் சிக்கிக் கொள்ளும் மாரி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

லிஃப்ட்டில் சிக்கிக் கொள்ளும் மாரி, ஜாஸ்மினால் வந்த சிக்கல் அடுத்து நடக்கப்போவது என்ன என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. கோவில் பூஜையை தொடர்ந்து சூர்யா மாரியை துணி கடைக்கு சென்றுள்ளனர்‌. இதனையடுத்து இன்றைய எபிசோடில் மாரியை சூர்யா துணி கடையில் விதவிதமான டிசைன்களில் புடவைகளை எடுத்துக்காட்ட மாரி பீல் பண்ண சூர்யாவும் காதலாக மாரியை பார்க்கிறான்.

மறுபக்கம் வீட்டில் நம்புதியை வைத்து தாரா சூர்யாவின் கையில் இருக்கும் கயிறை கழட்ட பூஜைகளை ஏற்பாடு செய்கிறாள். அனைவரும் காத்திருக்க சூர்யா வரவில்லை தாரா ஆபீசுக்கு போன் செய்து ஒருத்தனிடம் சூர்யாவை உடனடியாக கையெழுத்து போட வேண்டும் என்று வரச்சொல் என்று சொல்ல அவனும் சூர்யாவுக்கு போன் பண்ணிகிறான்.

போன் வந்ததும் சூர்யா மாரியிடம் நீ புடவை செலக்ட் பண்ணி விட்டு இங்கேயே இரு நான் ஆபீசுக்கு போயிட்டு வருகிறேன் என்று சொல்லி வெளியே போக அப்போது ஜாஸ்மின் உள்ளே வருகிறாள். ஜாஸ்மின் உள்ளே வந்து மாரியை பார்த்து ஒரு உதவியாளரிடம் பணத்தை கொடுத்து மாரி மீது ஜூசை கொட்ட சொல்கிறாள். அந்தப் பெண்ணும் அப்படியே பண்ண புடவையை கிளீன் செய்ய படிக்கட்டு ஏறி மேலே போகும்போது சூர்யா சொல்லிக் கொடுத்தது ஞாபகத்துக்கு வர மாரி லிப்டில் மேலே செல்கிறாள்.

மேலே சென்று டிரஸ்சை சரி செய்து கொண்டு மறுபடியும் லிப்டுக்குள் ஏறும் போது கீழே வந்து ஜாஸ்மின் லிப்ட் ஆப் பண்ணி அதை லாக் பண்ணி ரிப்பேர் செய்வது போல ஒயரை அறுத்து விடுகிறாள். உடனே லிஃப்டுக்குள் மாரி மாட்டி விட கதவு தட்ட காரணம் கேட்டு அனைவரும் விசாரிக்க ஜாஸ்மின் மேலே யாரும் இல்லை என சமாளித்து கடைக்காரனிடம் பேசிவிட்டு வெளியே வருகிறாள்.

Also read... ’டாப் கன் மேவரிக்’ முதல் ’தி பேட்மேன்’ வரை... 2022-ன் டாப் 10 ஹாலிவுட் படங்கள்!

கடைக்காரர்களும் லிப்டில் யாரும் இல்லை என்று நினைத்துக் கொண்டு இருக்க சூர்யா கொஞ்ச நேரம் சென்ற பின் கடைக்கு வந்து மாரியை தேட மாரி இல்லை.

வீட்டுக்கு வரும் ஜாஸ்மின் தாராவிடம் இந்த விஷயத்தை சொல்ல அவள் சந்தோஷப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv