ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மாரி, சூர்யா செயலால் கடுப்பான தாரா - மாரி சீரியல் அப்டேட்!

மாரி, சூர்யா செயலால் கடுப்பான தாரா - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரி, சூர்யா செயலால் கடுப்பான தாரா, ஸ்ரீஜா செய்யும் அடுத்த சூழ்ச்சி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. கோவில் பூஜையில் சூர்யாவும் மாரியும் நேருக்கு நேராக பார்த்து கொள்ள தாராவின் ஆசை நிறைவேறாமல் போனது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மாரி மணி அடிக்க முயற்சி செய்ய சூர்யா அவளுக்கு உதவி செய்ய இதை அனைத்தையும் தாரா, ஸ்ரீஜா, ஜாஸ்மின் மூவரும் பார்த்து கடுப்பாகின்றனர்.

அப்போது இரு வயதான தம்பதிகள் வர சூர்யா மாரி அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அவர்கள் தங்கள் கழுத்தில் இருந்த மாலையை மாரிக்கும் சூர்யாவுக்கும் அணிவிக்க தாரா உட்பட எல்லோரும் இன்னும் கடுப்பாகி வெளியே வர ஹாசினி புடவை எதுவுமே இல்லை சூர்யா சார் நீங்க மாரியை துணி கடைக்கு அழைத்துச் சென்று புடவை வாங்கி கொடுங்கள் என்று சொல்ல சூர்யாவும் சரி என்று சொல்லி மாரி அழைத்துப் போகிறான். இதனால் தாரா ஸ்ரீஜா இன்னும் கடுப்பாகின்றனர்.

அடுத்து ஸ்ரீஜா நம்பூதிரிக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்ல உடனே நம்பூதிரி வீட்டில் நான் வந்து சூர்யாவை வைத்து பூஜை செய்கிறேன். அவன் கையில் இருந்து அந்த கயிற்றை கழட்ட வேண்டும். அப்போது மாரி அருகில் இருக்கக்கூடாது, எப்படியாவது சூர்யாவை மட்டும் அழைத்து வாருங்கள் என்று சொல்ல ஜாஸ்மின் நான் அழைத்து வருகிறேன் என்று சொல்லி கிளம்பி செல்கிறாள்.

அப்போது விக்ரம் ஜானகியை வந்து சந்திக்க ஜானகி தாரா சிறுவயதில் சூர்யாவுக்கு கொடுப்பதற்காக ஒரு மேஜிக் பாக்ஸை வீட்டில் வைத்தாள். அதில் ஒரு ரகசியம் இருக்கிறது. அந்த மேஜிக் பாக்ஸ் இருந்தால் நிச்சயம் தாரா தப்பானவள் தான் என்று கண்டுபிடித்து விடலாம் என்று சொல்ல விக்ரம் யோசிக்கிறான்.

Also read... திருமால் பெருமையால் வெளியுலகுக்கு தெரிய வந்த சிவாஜியின் மகிமை!

அடுத்து சூர்யாவும் மாரியும் துணி கடைக்கு வரும்போது அப்போது லிஃப்டை பார்த்தவுடன் மாரி பயப்பட சூர்யா லிப்ட் எப்படி உபயோகிக்கப்பட வேண்டும் என்று கற்றுக் கொடுத்து உள்ளே அழைத்து செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv