ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஜாஸ்மினை கைது செய்ய வந்த போலீஸ் - மாரி சீரியல் அப்டேட்!

ஜாஸ்மினை கைது செய்ய வந்த போலீஸ் - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

ஜாஸ்மினை கைது செய்ய வந்த போலீஸ், தடுத்து நிறுத்தும் மாரி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் ஜாஸ்மின் குடித்துவிட்டு போதையில் சூர்யா வீட்டுக்கு வருகிறாள். அப்போது தாராவும் சங்கரப்பாண்டியும் யாருக்கும் தெரியாமல் ஜாஸ்மினை தனியாக அழைக்க ஜாஸ்மின் போதையில் உலருகிறாள்.

அதை ரூமில் இருக்கும் சூர்யா கேட்டு விடுவானோ என்ற பில்டப் யாருக்கும் தெரியாமல் ஜாஸ்மினை தாரா தன் அறைக்கு அழைத்து சென்று படுக்க வைக்க ஜாஸ்மின் படுக்காமல் தகராறு செய்கிறாள்.

இதை ஹாசினி கவனித்து சூர்யாவிடம் சொல்ல முடிவெடுத்து அவனது ரூமுக்கு சென்று சூர்யாவை அழைத்து வருகிறாள். ஆனால் அதற்குள் தாரா ஜாஸ்மினை படுக்க வைத்து விடுகிறாள்.

பின்னர் சூர்யா வந்து விசாரிக்க ஜாஸ்மின் தற்போது தான் வந்தா, தூங்கிக்கிட்டு இருக்கா என்று சமாளிக்க சூர்யா ரூமுக்கு சென்று விடுகிறான். அடுத்து இரவு தூக்கம் வராமல் சூர்யா புரண்டு படுக்க அப்போது மாரியின் டிரஸ் விலகி இருப்பதை பார்த்து கூச்சப்பட்டு மாரியை எழுப்பி டிரஸ் சரி செய்து படுக்க சொல்கிறான்.

Also read... எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டராக முடியாது... நீ நல்லா படிச்சா தான் டாக்டராக முடியும் - செம்பி டிரைலர் 2!

மறுநாள் காலை சூர்யா தன் ட்ராயரை திறக்க அதில் இரண்டு ஜிமிக்கி இருக்கிறது. அதை பார்த்து சந்தோஷம் ஜிமிக்கி நம்ம கிட்டயே வந்துருச்சு என சந்தோஷப்பட அதை பார்த்து மாரி ரசிக்கிறாள்.

அடுத்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வந்து நைட்டு ஜாஸ்மின் குடி போதையில் தன்னை அடித்த விஷயத்தை சொல்லி கைது செய்ய சொல்ல மாரி தடுத்து நிறுத்துகிறாள். இந்த குடும்ப மானம் போய்விடும் தயவு செய்து அரெஸ்ட் பண்ணாதீங்க என்று சொல்ல சூர்யா மாரியை நினைத்து எமோஷனாகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv