ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் ஜாஸ்மின் மாரியின் ஜிமிக்கியை உடைக்க போக மாரி வந்து தடுத்து நிறுத்துகிறாள். இது ஹஸ்பண்ட் சாருக்கு சொந்தமானது உடைக்க உனக்கு உரிமை இல்லை என்று அதை எடுத்துக் கொண்டு போய் சூர்யா ரூமில் வைக்கிறாள்.
அடுத்து மாரி பாத்ரூமில் தெய்வானை கொடுத்த மோதிரத்தை கழட்டி கொண்டிருக்கும் போது சூர்யா ஏன் என்று கேட்க இல்ல நீங்க சம்பந்தமில்லாமல் தான் அந்த மோதிரத்தை போட்டீங்க இந்த மோதிரம் பார்க்கும்போது உங்களுக்கு மனசு வருத்தப்படும் அதனால்தான் கழட்டுகிறேன்.
தயவுசெய்து உதவி பண்ணுங்க என்று சொல்ல சூர்யாவும் கழட்ட முயற்சிக்க மோதிரம் வராமல் இருக்கிறது. அப்போது ஷவர் பட்டு தண்ணி ஊத்த இருவரும் சவரில் நனைகின்றனர்.
அடுத்ததாக ஜாஸ்மின் மாரி திட்டியதை நினைத்து பார்த்து சரக்கு அடித்து விட்டு போதையில் காரில் வரும்போது போலீஸ் அவளை தடுத்து நிறுத்த நான் தேவி குரூப் ஆஃப் கம்பெனிஸ் ஓனர் சூர்யாவின் மனைவி என்று சொல்லி போலீசை அடிக்கிறாள்.
Also read... சிரிச்சா அசிங்கமா கேப்பேன்... நேரடியாக மோதிக்கொள்ளும் ஏடிகே மற்றும் அசீம்!
அதை ஒரு ரிப்போர்ட்டர் படம் பிடித்து டிவியில் போட அதை ஹாசினி பார்த்துவிட்டு சூர்யாவிடம் விஷயத்தை சொல்லி டிவியை பார்க்க அழைத்து வருகிறாள். இந்த விஷயம் அறிந்து சங்கர பாண்டி தாராவிடம் சொல்லி யாருக்கும் தெரியாமல் வீட்டின் கரண்டை ஆஃப் பண்ணுகிறான்.
அடுத்து சூர்யா வந்து பார்க்கும்போது கரண்ட் ஆஃப் ஆயிருக்க தாரா சமாளித்து அனுப்ப ஜாஸ்மின் போதையில் வீட்டுக்குள்ள வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv