ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

போதையில் கலாட்டா செய்த மாரி - மாரி சீரியல் அப்டேட்

போதையில் கலாட்டா செய்த மாரி - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

போதையில் கலாட்டா செய்த மாரி, சூர்யா சொன்னது என்ன என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா ஜாஸ்மினுக்கு மோதிரம் போடும்போது மாரி குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்கிறாள். தாம்பூல தட்டு அனைத்தையும் தட்டி விட மோதிரத்தையும் தட்டி விட மோதிரம் வேறொரு இடத்தில் போய் விழுந்து விடுகிறது. அனைவரும் மோதிரத்தை தேட மோதிரம் கிடைக்காமல் போக தாரா கோபமாகி மாரியைதிட்ட மாரி ஜாஸ்மின் சூர்யா சாருக்கு ஏத்த ஜோடி இல்லை என்று போதையில் சொல்கிறாள்.

இறுதியில் மாரி மயக்கமாய் கீழே விழ மாரியை தூக்கிய  சூர்யா மேலே சென்று மாரிக்கு என்ன ஆச்சு இந்த விசாரிக்க மாரி போதையில் சூர்யாவை கட்டிபிடித்து பெட்டில் விழுகிறாள். இறுதியில் சூர்யா மாரியை குளிப்பாட்ட பாத்ரூம் அழைத்துச் சென்று ஹாசினி அழைத்து டிரஸ் மாற்ற சொல்ல மாரி டிரஸ் மாத்தி அழைத்து வருகிறாள்.

ஹாசினியும் சூர்யாவும் மாரியிடம் கண்டிப்பா இதை நீ குடித்திருக்க மாட்ட யாரோ உனக்கு கலந்து கொடுத்திருக்காங்க உண்மையை சொல்லு என்று கேட்க கீழே தாரா ஜாஸ்மின் அனைவரும் இருக்க ஒரு வேலை மாரி நான் தான் கொடுத்தேன் என்று சூர்யாவிடம் சொல்லிவிட்டால் ஜாஸ்மினை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிடுவா என்று மேலே வருகிறாள்.

Also read... டாஸ்கில் அமுதவாணன் மீது குற்றச்சாட்டு வைக்கும் அசீம் - வெளியானது கலேபர வீடியோ!

இறுதியில் மாரி தெரியவில்லை என்று சொல்ல அப்போது மாரி அம்மா தெய்வானை வீட்டில் வந்து போன் செய்து தீபாவளி சீர் செய்வதாக சொல்ல சூர்யா கேட்டுவிட்டு உங்கள் அம்மா வந்திருக்காங்க என்று மாரியிடம் சொல்ல மாரி தயவு செய்து ஜாஸ்மின் விஷயம் அம்மாவிற்கு தெரிய வேண்டாம், தெரிந்தால் அம்மா வருத்தப்படுவாங்க என்று சொல்ல சூர்யா தயவு செய்து யாரும் தெய்வானையிடம் ஜாஸ்மின் விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று சொல்லி கீழே வர தெய்வானையின் தீபாவளி சீரை தாரா அவமானம் செய்கிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv