ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நிச்சயதார்த்தத்தில் ஜாஸ்மின் செய்த சதி - மாரி சீரியல் அப்டேட்!

நிச்சயதார்த்தத்தில் ஜாஸ்மின் செய்த சதி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

நிச்சயதார்த்தத்தில் ஜாஸ்மின் செய்த சதி, கலாட்டா செய்யும் மாரி என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சூர்யா ஜாஸ்மின் நிச்சயதார்த்தத்திற்கு ரெடியாகி கொண்டிருக்க அப்போது சூர்யாவின் மனசாட்சி வந்து சூர்யாவை திட்டுகிறது‌.

அப்போது மாரி வர சூர்யாவை பார்த்து அழகாய் இருப்பதாக சொல்கிறாள். அடுத்து சூர்யா சட்டை பட்டன் ஒன்று அறுந்திருக்க அதை கவனித்த மாரி இருங்க நான் தைத்து விடுகிறேன் என்று சொல்லி ஊசி எடுத்து பட்டன் தைக்கிறாள்.

அப்போது ஊசி மாரியின் கையில் குத்தி விட ரத்தம் வர உடனே சூர்யா தன் வாயால் எடுத்து மாரியின் விரலை சப்ப அப்போது அந்த பக்கம் வரும் ஜாஸ்மின் அதை பார்த்து கடுப்பாகிறாள்.

பின்னர் கடுப்பான ஜாஸ்மின் மாரியை அசிங்கப்படுத்த கூல்ட்ரிங்க்ஸில் சரக்கு கலந்து மாரிக்கு கொடுத்து பங்க்ஷனில் அசிங்கப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு குடிக்க வைக்கிறாள்.

Also read... Happy Birthday Rajinikanth | ரஜினியின் இந்த புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?

அடுத்து நிச்சயதார்த்தம் ஆரம்பிக்க சூர்யா, ஜாஸ்மின் என இருவரும் மாலை மாற்றிக் கொள்ள ஜாஸ்மின் சந்தோசமாக இருக்கிறாள். அப்போது ஜாஸ்மின் சூர்யாவின் கைக்கு மோதிரம் போட சூர்யா ஜாஸ்மின் கைக்கு மோதிரம் போடும்போது திடீரென மாரி குடி போதையில் நிறுத்துங்க என சத்தம் போடுகிறார். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv