ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சூர்யாவிற்கு நிச்சயதார்த்த தேதி குறித்த தாரா - மாரி சீரியல் அப்டேட்

சூர்யாவிற்கு நிச்சயதார்த்த தேதி குறித்த தாரா - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

நிச்சயதார்த்த தேதி குறித்த தாரா, சூர்யா, மாரி செய்த வேலையால் காத்திருந்த ஷாக் என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் தாரா ஜோசியரை அழைத்து சூர்யாவுக்கும் ஜாஸ்மினுக்கும் நிச்சயதார்த்த தேதி குறிக்கிறாள். மேலும் அப்போது தாரா ஜாஸ்மினுக்கு விலை உயர்ந்த நெக்லஸை சூரியா கையால் பரிசாக அளிக்க மாரி பீல் செய்கிறாள்.

பின்னர் சூர்யா நகை கடைக்கு சென்று மாரிக்கு ஏத்த மாதிரி ஒரு நெக்லஸை வாங்குகிறான். இந்த பக்கம் ஜாஸ்மின் மல்லிப்பூவில் சூர்யாவின் ரூமை அலங்காரம் செய்ய அப்போது மாரி வந்து பார்க்க மல்லி பூவாக இருக்க கோபத்தில் அனைத்து மல்லியும் தூக்கி வீசுகிறாள்.

இதனால் ஜாஸ்மின் காரணம் கேட்க இது என்னுடைய ரூம் நீ எப்ப சூர்யா சார் கையால தாலி கட்டிக்கறியோ அதுக்கு அப்புறம் தான் இது உன்னுடைய ரூம் அதுவரைக்கும் இது என்னுடைய ரூம் இந்த ரூம்ல இதெல்லாம் பண்ணக்கூடாது என்று பிச்சி வீச ஜாஸ்மின் கீழே வந்து தாராவிடம் விஷயத்தை சொல்கிறாள்.

அப்போது சூர்யா வர சூர்யாவிடம் நடந்ததை சொல்ல சூர்யா மாரியை அழைத்து விசாரிக்க மாரி மல்லிப்பு அதிகமா இருந்தா உடம்புக்கு ஆகாது அதனால மல்லிப்பூ டெக்கரேஷன் பண்ண கூடாதுன்னு சொல்லிவிட்டேன் என்று சொல்ல சூர்யா இதுக்கு என்னமா விடுங்க அப்படி என்று அசால்டாக சொல்கிறான்.

Also read... கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 பாடல்கள் லிஸ்டில் இடம்பிடித்த புஷ்பா!

அப்போது சூர்யா கையில் பாக்ஸை பார்த்து தாரா என்னவென்று கேட்க நெக்லஸ் என்று சூர்யா சொல்ல உடனே ஜாஸ்மின் சந்தோசமாக தேங்க்ஸ் சூர்யா என சொல்ல இது உங்களுக்கு இல்ல உங்களுக்கு அம்மா வாங்கி குடுத்துட்டாங்கல, அதனால நான் மாரிக்கு வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல தாராவும் ஜாஸ்மினும் அப்செட் ஆகின்றனர். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv