Home /News /entertainment /

தாராவால் மாரியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவெடுக்கும் சூர்யா - மாரி சீரியல் அப்டேட்

தாராவால் மாரியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவெடுக்கும் சூர்யா - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல் அப்டேட்

தாராவால் மாரியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவெடுக்கும் சூர்யா, மாரி சீரியலில் கடைசியில் நடந்தது என்ன இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. மாரியை சுஜாதா மற்றும் பார்வதி இருவரும் பார்க்க அவுட் ஹவுஸ்க்கு சென்றிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் அவுட் ஹவுஸ்க்கு வந்த இருவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் கேட்க ஆசிர்வாதம் செய்து புடவையை மாரி கையில் கொடுக்கின்றனர். பிறகு பார்வதி மாரியை பார்த்து தன்னுடைய காணாமல் போன பொண்ணு இருப்பதாக பீலிங்காக சொல்ல நான் உங்களை என்னுடைய அம்மாவாக நினைத்துக் கொள்கிறேன் என சொல்ல பார்வதி சந்தோஷப்படுகிறாள்‌.

    பிறகு இரண்டு வேலைக்காரர்கள் மூட்டை தூக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் மாரி உதவி செய்ய அவர்கள் நீங்க இந்த வீட்டோட மூத்த மருமகள் நீங்க இதெல்லாம் பண்ணா தப்பா போயிடும் என சொல்ல அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என மாரி அவர்களுக்கு உதவி செய்கிறாள்.

    Also read... சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு எண்ட்ரி கொடுக்கும் சித்து சித்!

    இந்த நேரத்தில் தம்பி சங்கரபாண்டியுடன் வரும் தாரா மாரியை முறைத்துக் கொண்டே உள்ளே செல்ல பிறகு ஹாசினி தாரா இருக்கும் ரூமுக்கு சென்று இந்த ரூமை சூர்யா மற்றும் மாரி ஃபர்ஸ்ட் நைட்டுக்காக தயார் செய்யப்போகிறேன் என சொல்ல தாரா கோபப்பட்டு அவளை திட்டி வெளியே அனுப்புகிறாள். பிறகு அங்கு வந்த சூர்யா தாராவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு இப்போது மாரியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறேன் என கோபமாக மாரியை சந்திக்க அவுட் ஹவுஸ்க்கு செல்கிறான்.

    இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? மாரியை சந்திக்கும் சூர்யா சொன்னபடி மாரியை அனுப்பி விடுவானா? தாராவின் திட்டம் ஜெயிக்குமா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி