Home /News /entertainment /

மாரியிடம் ஜெகதீஷ் வாங்கும் சத்தியம் - மாரி சீரியல் அப்டேட்!

மாரியிடம் ஜெகதீஷ் வாங்கும் சத்தியம் - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரியிடம் ஜெகதீஷ் வாங்கும் சத்தியம், மாரி சீரியலில் அடுத்து நடக்கப் போவது என்ன இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. ஜெகதீஷ்க்கு தாரா பாலில் விஷம் கலந்த விஷயமும் அரவிந்த் மருத்துவமனையில் அட்மிட்டான விஷயமும் தெரிய வருகிறது.

    இன்றைய எபிசோடில் மாரியை  பார்க்க ஜெகதீஷ் அவுட் ஹவுஸ் வருகிறார். பிறகு மாரியை சந்தித்து நலம் விசாரித்து உனக்கு எதையும் முன்கூட்டியே அறியும் சக்தி இருப்பதை எக்காரணம் கொண்டும் யாரிடமும் சொல்ல கூடாது. தாரா சூர்யாவை தீர்த்து கட்ட இன்னும் மும்மரமாக இறங்கி விடுவாள் என சொல்கிறார். இதனையடுத்து மாரி எக்காரணம் கொண்டும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று ஜெகதீஷ்க்கு சத்யம் செய்து கொடுக்கிறார்.

    இந்த பக்கம் அரவிந்த் கண் விழித்ததும் சந்தோஷப்படும் தாரா பாலில் விஷம் கலந்த விஷயம் ஊரில் இருந்த மாரிக்கு எப்படி தெரியும் என யோசிக்கிறாள். பிறகு மாரி அவுட் ஹவுஸில் வீட்டுக்கு போன் செய்ய வேண்டும் என சொல்ல உடனே ஜெகதீஷ் போன் போட்டு கொடுக்கிறார். மாரி தன் அம்மா மற்றும் தாத்தாவிடம் எந்த பிரச்சனையும் இல்லை, நான் சந்தோஷமா இருக்கேன் சொல்ல இதை கேட்டு அவர்களும் சந்தோஷப்படுகின்றனர். உடனே கிளி சிவா ஸ்ரீஜாவை கிண்டல் பண்ண அவள் கடுப்பாகிறாள்.

    Also read... அமுதாவுக்கு கெடுவைத்த காண்ட்ராக்டர், புது பிரச்சனையில் செந்தில் - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

    போன் பேசி முடித்ததும் ஜெகதீஷ் மாரியிடம் இனிமேல் என்னை சார் என்று அழைக்காதம்மா மாமா என்று உரிமையோடு அழை என்று சொல்ல மாரியும் மாமா என்று அழைக்கிறாள். பிறகு சந்தோஷத்துடன் ஜெகதீஸ் செல்ல பார்வதியும் சுஜாதாவும் தட்டில் புடவை பூ எடுத்து கொண்டு மாரியை பார்க்க வர மாரி அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க பார்வதிக்கு தன் பெண்ணை பார்த்தது போன்ற உணர்வு வருகிறது.

    ஜெகதீஷ் வாங்கிய சத்தியத்தால் அடுத்து நடக்கப் போவது என்ன? மாரிக்கு இருக்கும் சக்தி பற்றி தாராவுக்கு தெரிய வந்தால் என்னவாகும் என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி