Home /News /entertainment /

மாரியை கிண்டல் செய்யும் ஹாசினி - மாரி சீரியல் அப்டேட்!

மாரியை கிண்டல் செய்யும் ஹாசினி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல் அப்டேட்

இன்றைய எபிசோடில் மாரி சொல்வது உண்மை இல்லை என எல்லோரும் சொல்ல குருஜி மாரி இந்த வீட்டிலேயே இருக்கட்டும் என சொல்ல தாரா வேறு வழியில்லாமல் கெஸ்ட் ஹவுஸில் வேண்டுமானால் இருக்கட்டும் என முடிவெடுக்கிறாள்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மாரியை கிண்டல் செய்யும் ஹாசினி, அரவிந்த் உயிருக்கு என்னாச்சு மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மாரி சொல்வது உண்மை இல்லை என எல்லோரும் சொல்ல குருஜி மாரி இந்த வீட்டிலேயே இருக்கட்டும் என சொல்ல தாரா வேறு வழியில்லாமல் கெஸ்ட் ஹவுஸில் வேண்டுமானால் இருக்கட்டும் என முடிவெடுக்கிறாள். பிறகு குருஜி மாரியை அழைத்து நீ நினைத்த காரியம் நடக்கும் என அவளை ஆசீர்வதிக்கிறார்.

    அடுத்ததாக தாராவும் சங்கர பாண்டியன் மேலே ரூமுக்கு சென்று அரவிந்த்தை தேட அவன் இல்லாததால் தினேஷ் எல்லாம் உங்களுடைய பேராசை தான் காரணம் என்ன திட்டுகிறான். இந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து தாராவுக்கு போன் வருகிறது. அரவிந்த் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாக சொல்ல உடனே இவர்கள் மூவரும் கிளம்பி மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

    பிறகு வீட்டில் ஹாசினி மாரியை அழைத்துக் கொண்டு கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்கிறாள்‌. ஞாயமா பார்த்தா உனக்கு இன்னிக்கி முதல் இரவு ஆனா உன்ன இங்க கொண்டு வந்து விடுவது தப்பு என சொல்ல முதல் இரவா அப்படின்னா என்ன என மாரி வெகுளியாக கேட்க நீ டிவி எல்லாம் பார்க்க மாட்டியா என காதில் விஷயத்தை சொல்ல மாரி வெட்கப்படுகிறாள்.

    Also read... அமுதாவிடம் 15 லட்சம் பணத்தை திருட நடக்கும் சதி - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்!

    மருத்துவமனைக்கு வந்த தாராவிடம் டாக்டர் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தாலும் அரவிந்தை உயிரோட பார்த்திருக்க முடியாது என சொல்ல இதையெல்லாம் ஜெகதீஷ் மறைந்திருந்து கேட்கிறார். இதனால் தாரா பாலில் விஷம் கலந்தது உண்மைதான் என்பது அவருக்கு தெரிய வருகிறது. இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன? கெஸ்ட் ஹவுஸுக்கு வரும் மாரி அடுத்து என்ன செய்யப் போகிறாள்? சூர்யா மாரியை ஏற்பானா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி