Home /News /entertainment /

சொத்துக்கள் அனைத்தையும் மாரி பெயரில் எழுதிய ஜெகதீஷ் - மாரி சீரியல் அப்டேட்

சொத்துக்கள் அனைத்தையும் மாரி பெயரில் எழுதிய ஜெகதீஷ் - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல் அப்டேட்

தாரா இது பத்தி யோசித்து ஆடிட்டரிடம் சென்று சூர்யாவுக்கு திருமணமான விஷயத்தை கேட்க ஆடிட்டர் சொல்ல மறுக்கிறார். இதனால் தாரா அவருக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து சூர்யாவிற்கு திருமணமான விஷயமும் திருமணமான பெண்ணின் பெயர் மாரி என்ற விஷயத்தை தெரிந்து கொள்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
    சொத்துக்கள் அனைத்தையும் மாரி பெயரில் எழுதிய ஜெகதீஷ் மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. சூர்யாவை காப்பாற்ற சென்னைக்கு கிளம்ப மாரி முடிவு செய்து இருந்தாள்.  இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் கோயிலில் மாரி வந்து சாமி கும்பிட்டு விட்டு சூர்யாவை காப்பாற்ற புறப்பட்டு செல்வது வழியில் ஒரு ஒரு வேன் டிரைவர் வேன் ரிப்பேர் என அதனை சரி செய்து கொண்டிருக்க அவர்கள் சென்னை போவது அறிந்த மாரி அவர்களிடம் உதவி கேட்காமல் பின்பக்கமாக வண்டியில் ஓடி வந்து மாரி ஏறி விடுகிறாள்.

    இது டிரைவருக்கு தெரியாமல் இருப்பது இரவு முழுவதும் தூங்கியபடி டிராவல் செய்கிறாள். இந்த பக்கம் சூர்யா வீட்டில் மறுநாள் காலை ஜெகதீஷ் ஆடிட்டருக்கு போன் செய்து வீட்டில் வந்து சொத்து விஷயத்தை அனைத்தையும் அனைவரிடம் சொல்ல சொல்கிறார்.



    இதனால் ஆடிட்டரும் வீட்டிற்கு வந்து அனைத்து சொத்துக்களும் சூர்யா திருமணம் செய்யும் பெண்ணுக்கு சொந்தமாகும் என்று சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சி அடைகின்றனர். அதிலும் குறிப்பாக தாராவிற்கு பேரதிர்ச்சி.

    Also read... ஸ்கூலில் செந்தில் செய்த வேலையால் கடும் கோபத்தில் அமுதா - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

    பிறகு தாரா இது பத்தி யோசித்து ஆடிட்டரிடம் சென்று சூர்யாவுக்கு திருமணமான விஷயத்தை கேட்க ஆடிட்டர் சொல்ல மறுக்கிறார். இதனால் தாரா அவருக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து சூர்யாவிற்கு திருமணமான விஷயமும் திருமணமான பெண்ணின் பெயர் மாரி என்ற விஷயத்தை தெரிந்து கொள்கிறார்.

    மொத்த சொத்தையும் அபகரிக்க நினைத்த தாரா தற்போது சொத்துக்கள் மாரியின் பெயரில் மாற்றி எழுதப்பட்டதால் அடுத்து என்ன செய்யப் போகிறாள்? வேனில் ஏறி சென்னைக்கு வரும் மாரி எப்படி சூர்யாவின் வீட்டுக்கு சென்றடைய போகிறாள்? அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி