Home /News /entertainment /

சூர்யாவை காப்பாற்ற சென்னைக்கு கிளம்பும் மாரி - மாரி சீரியல் அப்டேட்!

சூர்யாவை காப்பாற்ற சென்னைக்கு கிளம்பும் மாரி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல் அப்டேட்

சூர்யாவுக்கு ஆபத்து என்பது உணரும் மாறி சென்னைக்கு போவதாக சொல்ல அவருடைய தாத்தா நீலகண்டன் அதெல்லாம் நீ போக வேண்டாம் என கூற தெய்வானை அவள் போகட்டும் அவளுடைய புருஷனை காப்பாற்றட்டும் என கூறினாள்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சூர்யாவை காப்பாற்ற சென்னைக்கு கிளம்பும் மாரி, அம்மாவின் பூஜைக்கு மறுப்பு தெரிவிக்கும் சூர்யா, மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.

     ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. சூர்யாவுக்கு ஆபத்து என்பது உணரும் மாறி சென்னைக்கு போவதாக சொல்ல அவருடைய தாத்தா நீலகண்டன் அதெல்லாம் நீ போக வேண்டாம் என கூற தெய்வானை அவள் போகட்டும் அவளுடைய புருஷனை காப்பாற்றட்டும் என கூறினாள்.

    இதனையடுத்து இன்றைய எபிசோடில் சூர்யாவை காப்பாற்ற மாரி தன் வீட்டில் இருந்து சென்னைக்கு கிளம்புகிறாள். இந்த பக்கம் ஜெகதீஷ் வர வெள்ளிக்கிழமை தேவிக்கு பூஜை செய்ய வேண்டும். அதற்காக குருஜி வருகிறார், இந்த பூஜையை சூர்யாவின் கையால் தான் செய்ய வேண்டும் என சொல்ல இதற்கு சூர்யா மறுப்பு தெரிவிக்கிறான். அதன் பிறகு தாராவின் மூலமாக சூர்யாவிடம் பேசி இதற்கு சம்மதிக்க வைக்கிறார் ஜெகதீஷ்.



    இந்த பக்கம் சூர்யாவின் முகவரி தெரியாத மாதிரி அவரை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிடலுக்கு சென்று அவருடைய முகவரியை கேட்க முதலில் தர மறுக்கின்றனர். அதன் பிறகு டாக்டரிடம் கெஞ்சி சூர்யாவின் முகவரியை வாங்குகிறாள்.

    Also read... பச்சை நிற புடவையில் மெல்போர்ன் சாலையில் உலாவரும் தமன்னா!

    பிறகு சுஜாதாவும் பார்வதியும் தேவி போட்டோ முன்பு நின்று இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உனக்கு பூஜை நடக்கப் போகிறது. அதுவும் சூரியாவின் கையில் நடப்பதால் கண்டிப்பாக இனிமே நல்ல விஷயங்கள் நடக்கும் என்று சந்தோஷப்படுகின்றனர்.

    ஹாஸ்பிடலில் சூர்யாவின் முகவரியை வாங்கிய மாரி அடுத்து என்ன செய்யப் போகிறாள்? தாராவின் மூலம் ஜெகதீஷ் சூர்யாவை பூஜைக்கு சம்மதிக்க வைக்க அடுத்து சூர்யாவின் வீட்டில் என்ன நடக்கப் போகிறது என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி