Home /News /entertainment /

மாரியை வீட்டை விட்டு அனுப்ப ஸ்ரீஜா செய்யும் வேலை - மாரி சீரியல் அப்டேட்

மாரியை வீட்டை விட்டு அனுப்ப ஸ்ரீஜா செய்யும் வேலை - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல் அப்டேட்

ஹாசினி சூர்யாவுக்கு தலையில் அடிபட்டு இருக்கும் விஷயத்தை தாராவிடம் சொல்ல அவர் அழுது புலம்பி டிராமா போடுகிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    மாரியை வீட்டை விட்டு அனுப்ப ஸ்ரீஜா செய்யும் வேலை, சூர்யாவிடம் டிராமா போடும் தாரா, மாரி சீரியல் இன்றைய  எபிசோட் அப்டேட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் தான் மாரி. மாரிக்கும் சூர்யாவுக்கும் திருமணம் ஆன நிலையில் சமயபுரத்தை விட்டு கிளம்பிச் சென்ற சூர்யா ரூமுக்குச் சென்று மாரிக்கு தாலி கட்டிய விஷயத்தை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்.

    தாரா ஜெகதீசன் எதுக்கு சமயபுரம் போனீங்க என கேட்க அதான் தினேஷ் சமயபுரம் வந்தான்ல அவன் கிட்டயே கேளு என முகத்தில் அடித்தார் போல சொல்லி விடுகிறார். அதன் பின்னர் சூர்யாவின் பக்கத்தில் இருக்கும் கோவில் பிரசாதத்தை பார்த்து வேலைக்காரி சுஜாதாவிடம் சொல்ல சுஜாதா சூர்யாவிடம் விசாரிக்க தயவுசெய்து இதைப் பற்றி பேச வேண்டாம் என கூறிவிடுகிறார்.



    அதன்பின்னர் ஹாசினி சூர்யாவுக்கு தலையில் அடிபட்டு இருக்கும் விஷயத்தை தாராவிடம் சொல்ல அவர் அழுது புலம்பி டிராமா போடுகிறார். அது மட்டுமல்லாமல் தினேஷ் எதற்கு சமயபுரம் போனான் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும் என சொல்ல உடனே தாரா மயங்கி விழுவது போல ட்ராமாவை போட்டு சூர்யாவை பார்க்காமல் இப்படி ஆகிவிட்டது என நடிக்கிறார். இதை நம்பும் சூர்யா தாராவை சமாதானம் செய்கிறார்.

    Also read... லவ் மீ லிட்டில் லிட்டில் லிட்டில்... ஹேப்பி பர்த்டே சாரா அலி கான்!

    இந்த பக்கம் ஸ்ரீஜா நான்கு பெண்களை வீட்டுக்கு அழைத்து வந்து திருமணமாகாமல் மாரி வீட்டில் இருக்கிறாள் அவரை ஊரை விட்டு துரத்தி சொல்ல எல்லோரும் ஸ்ரீஜாவை திட்டி விட்டு விட்டு செல்ல தெய்வானையும் ஸ்ரீஜாவை திட்டுகிறார்.

    அடுத்து என்ன நடக்கப்போகிறது? சூர்யா மாரி திருமணம் பற்றி தாராவுக்கு தெரிய வருமா? என பல விஷயங்களை அறிந்து கொள்ள இனிவரும் எபிசோடில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி