முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / மாரியை கொல்ல நடந்த சதி - மாரி சீரியல் அப்டேட்!

மாரியை கொல்ல நடந்த சதி - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரியை கொல்ல நடந்த சதி, ஷாக் அடித்து கருகிய ஜாஸ்மின் என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. கோவிலில் ஶ்ரீஜா, ஜாஸ்மின் சாட்டையால் அடி வாங்கிய நிலையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலி சாமியார் தெளிந்து ஶ்ரீஜா மற்றும் ஜாஸ்மினிடம் என்னுடைய பெர்ஃபார்மன்ஸ் எப்படி என கேட்க அவரை பளார் என அறைந்து நடந்த விஷயத்தை சொல்ல அப்போ அந்த கருப்பசாமி தான் என் உடம்புக்குள்ள இறங்கி இதெல்லாம் பண்ணி இருக்கான் என பூசாரி சொல்கிறான்.

அதன் பிறகு பைத்தியக்காரன் ஒருவனைப் பார்த்து மாரி வாழைப்பழத்தை கொடுக்க அதை சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து அவன் கிளம்பிச் செல்ல கோவிலில் இருக்கும் மணியை ஒரு முறை அடித்தால் அதன் பிறகு அந்த மணி தானாக மூன்று முறை அடித்தால் நீங்கள் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும் என்பது சம்பிரதாயம் என தெரிய வருகிறது.

இதனால் குடும்பத்தார் எல்லோரும் மாரியை அந்த மணியை அடிக்க சொல்ல இதை காரணமாக பயன்படுத்தி ஸ்ரீஜா மற்றும் ஜாஸ்மின் அந்த மணியில் கரண்ட் ஷாக் வைத்து மாரியை கொல்ல திட்டமிடுகின்றனர். அவர்களும் கரண்ட் ஷாக் வைக்க மாரி மணி அடிக்கப் போன நேரத்தில் பைத்தியக்காரன் ஒயரை பிடுங்கி விட மாரி மணி அடித்த பிறகு அந்த மணி தானாக மூன்று முறை அடிக்க அவள் சந்தோஷப்படுகிறாள்.

மறுபக்கம் கோவிலில் என்ன நடந்துச்சு என்று தெரியாமல் தாரா குழப்பத்தில் இருக்க ஜாஸ்மின் மாரி மட்டும் தான் மணியடிப்பாளா நானும் அடிக்கிறேன் என சொல்லி மணியை அடிக்கப் போக இந்த நேரத்தில் பைத்தியக்காரன் ஒயரை பிளக் பாயிண்ட்டில் சொருகி விட மணி அடித்த ஜாஸ்மின் கரண்ட் ஷாக் அடித்து கருகி போய் உட்காருகிறாள்.

அதன் பிறகு எல்லோரும் சந்தோஷமாக வீட்டுக்கு வர தாரா உன்ன சும்மா விடமாட்டேன் என மாரியை பார்த்து மைண்ட் வாய்ஸ்ல் பேச மாரி எனக்கு அந்த அம்மன் துணையும் கருப்பன் துணையும் இருப்பதாக மைண்ட் வாய்ஸில் பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv