முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தேவியை கட்டுப்படுத்த தாரா எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்!

தேவியை கட்டுப்படுத்த தாரா எடுத்த முடிவு - மாரி சீரியல் அப்டேட்!

மாரி சீரியல்

மாரி சீரியல்

மாரியால் காத்திருந்த அதிர்ச்சி, தேவியை கட்டுப்படுத்த தாரா எடுத்த முடிவு  என மாரி சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி.  இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் தாரா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த நிலையில் மாரி கோவிலில் இருந்து வர தாரா அம்மாவுக்கு ஆரத்தி எடுக்காம நீ எங்க போன என சூர்யா சத்தம் போடுகிறான்.

அடுத்து மாரி அவங்க டிஸ்சார்ஜ் ஆகுறாங்கனு எனக்கு தெரியும், அதனால் தான் கோவிலுக்கு போய் அவங்களுக்காக அர்ச்சனை செய்து விட்டு வந்ததாக சொல்கிறாள். மேலும் இனிமே தாரா அம்மாவை நான் பார்த்துக்கிறேன். நீங்க ஜாஸ்மினை கல்யாணம் பண்ணுவதற்கான வேலையை பாருங்க என சொல்லி உள்ளே போகிறாள்.

அடுத்து சூர்யா ரூமுக்கு வந்து மாரியிடம் யார் என்ன சொன்னாலும் தாரா அம்மா பத்தி தப்பா சொல்றதை என்னால் நம்ப முடியாது, அவங்க எனக்காக வாழறாங்க. இதுவரைக்கும் அவங்க அரவிந்த்தை கூட போய் பார்க்கல, விக்ரமை யாரோ குழப்பி இருக்காங்க என சொல்ல மாரியும் உண்மையை சொல்ல முடியாமல் ஆமாம் என சொல்கிறாள்.

மறுபக்கம் தாரா, ஜாஸ்மின், சங்கரபாண்டி ஆகியோர் மாரியின் பேச்சு வித்தியாசமாக இருக்கு என பேசிக் கொண்டிருக்க ஶ்ரீஜா தேவியம்மா மாரி முன்னாடி தோன்றி பேசிய விஷயத்தை சொல்கிறாள். தேவி அம்மா மாரியிடம் பேசுவதை நிறுத்தாமல் அவளை ஒண்ணும் பண்ண முடியாது என சொல்லி முதலில் தேவியின் சக்தியை கட்டுபடுத்த வேண்டும், எனக்கே தெரிந்த மலையாள மாந்தரீகர் ஒருவர் இருப்பதாக சொல்கிறாள்.

அடுத்து தாரா தேவி அம்மா முன்பு நின்று இவ்வளவு வேலையும் பார்க்கிறது நீதானா? உன்னை கொன்ற எனக்கு அடுத்து என்ன பண்ணணும்னு தெரியும், மாரியை வெளியே அனுப்பி இந்த சொத்தை அடையாமல் விட மாட்டேன் என சபதம் எடுக்கிறாள்.

அதோடு மறுநாள் தாரா, ஜாஸ்மின், சங்கரபாண்டி, ஶ்ரீஜா என எல்லோரும் சேர்ந்து மாந்தரீகரை சந்தித்து விஷயத்தை சொல்ல அவர் 4 முட்டை, 4 எலுமிச்சை பழத்தை கொடுத்து வீட்டின் நான்கு பக்கமும் இதை புதைக்க சொல்கிறார். அப்படி செய்தால் தேவியால் வீட்டுக்குள் வர முடியாது, மாரியிடமும் பேச முடியாது என சொல்கிறார்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv