Home /News /entertainment /

சகுந்தலாவால் குடும்பத்தை பிரிந்து செல்ல முடிவெடுத்த மாரி - மாரி சீரியல் அப்டேட்

சகுந்தலாவால் குடும்பத்தை பிரிந்து செல்ல முடிவெடுத்த மாரி - மாரி சீரியல் அப்டேட்

மாரி சீரியல்

மாரி சீரியல்

உண்மையை புரிந்து கொள்ளாத சகுந்தலா மாரி வாய் திறந்ததுதான் பிரச்சனைக்கு காரணம் என  ‘’இவ இந்த ஊர்லயே இருக்க கூடாது’’ என எச்சரிக்க மாரியின் அம்மா தெய்வாணை ஊரை விட்டு போய்விடலாம் என முடிவெடுக்கிறாள்.

  • News18
  • Last Updated :
    சகுந்தலாவால் குடும்பத்தை பிரிந்து செல்ல முடிவெடுத்த மாரி, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் மாரி. ஆஷிகா, அபிதா, டெல்லி கணேஷ், வனிதா விஜயகுமார் எனப் பலர் இணைந்து நடித்து வரும் இந்த சீரியல் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

    திருமண மணமேடை வரை சென்ற தனது தோழிக்கு ஆபத்து இருக்கிறது என மாரி சொல்ல சகுந்தலா அதை காதில் வாங்காமல் மாரியை திட்டி அனுப்பினாலும் மாரி நடக்க இருந்த அசம்பாவிதத்தில் இருந்து தனது தோழியை காப்பாற்றிவிட்டாள்.

    உண்மையை புரிந்து கொள்ளாத சகுந்தலா மாரி வாய் திறந்ததுதான் பிரச்சனைக்கு காரணம் என  ‘’இவ இந்த ஊர்லயே இருக்க கூடாது’’ என எச்சரிக்க மாரியின் அம்மா தெய்வாணை ஊரை விட்டு போய்விடலாம் என முடிவெடுக்கிறாள்.

    Also read... சன்னியாசியாக முடிவெடுத்த தெய்வநாயகம்…பொம்மி வாழ்க்கை என்னவாகும்?

    இந்த நிலையில் மாரி தன்னால் குடும்பத்திற்கு பிரச்சனை வேண்டாம் என வீட்டை விட்டு கிளம்ப முடிவு செய்கிறாள். இன்னொரு பக்கம் சூர்யா அமெரிக்காவுக்கு கிளம்ப அந்த நேரத்தில் சூர்யாவுக்கு எதிராக நடந்த திட்டங்கள் அனைத்தும் அவரது அப்பாவுக்கு தெரிந்து விட இந்த அதிர்ச்சியில் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடுகிறது. இதனையடுத்து நடக்கப்போவது என்ன? மாரியும் சூர்யாவும் எப்படி திருமண வாழ்க்கையில் ஒன்றிணையப் போகிறார்கள்  என்ற கோணத்தில் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Zee Tamil Tv

    அடுத்த செய்தி