ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நெருப்பில் சிக்க போன கார்த்தி உயிரை காப்பாற்றிய தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

நெருப்பில் சிக்க போன கார்த்தி உயிரை காப்பாற்றிய தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

நெருப்பில் சிக்க போன கார்த்தியின் உயிரை காப்பாற்றிய தீபாஎன கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் பங்க்ஷனில் அப்பா அம்மாவை தனித்தனியாக ஐ லவ் யூ சொல்ல வைக்க அப்பா அம்மா இருவரும் வெட்கப்பட்டு ஐ லவ் யூ சொல்கிறார்கள். அதை பார்த்து தீபா ரசிக்கிறாள்.

பின்பு ஐஸ்வர்யா ராஜ ஸ்ரீயும் கச்சேரி ஆரம்பிக்கலாம் என்று சொல்ல ராஜஸ்ரீ, ரூபா ஸ்ரீ மேடையில் அமர வைத்துவிட்டு நேராக தீபாவிடம் சென்று பாட சொல்வது அனைவரும் காத்திருக்க ரூபா ஸ்ரீ வாய் அசைக்க தீபா பாடுகிறாள்.

அடுத்து பாட்டினிலே கார்த்திக்கு போன் வர கார்த்திக் எழுந்து சென்று தீபா பாடும் மேக்கப் அறையின் அருகே நிற்க கார்த்திக் தீபாவை பார்த்து விடுவானா என்ற பில்டப் போக இறுதியில் பார்க்காமல் வந்து விடுகிறான்.

அடுத்து பாட்டின் முடிவில் அனைவரும் கைதட்டி ரசிக்க அபிராமி ஐஸ்வர்யா அருண் என அனைவரும் தீபாவின் குரலைப் பார்த்து பாராட்டுகின்றனர். அப்போது திடீரென பயர் ஆக்சிடென்ட் ஏற்பட அனைவரும் பதட்டமாக கரண்ட் கட்டாக கார்த்திக்கு இருட்டைப் பார்த்ததும் பதபதப்பாக கூட்டத்தில் இருந்து நெருப்பு அருகே வர கார்த்திக் நெருப்பில் மாட்ட போக தீபா வந்து காப்பாற்றுகிறாள்.

அப்போது ஐஸ்வர்யா பார்த்து ஓடிவிட அபிராமி வந்து என்னாச்சு? என்னாச்சு என்று கதற டாக்டர் வந்து ஒன்னும் இல்லை, பயப்படாதீங்க என்று சொல்லிவிட்டு போக கார்த்திக் அப்போது தன்னை ஒரு பெண் காப்பாற்றிய விஷயத்தைச் சொல்ல அபிராமி சந்தோஷம் அடைகிறாள்.

Also read... WATCH: ரஜினியின் எவர்கிரீன் காதல் பாடல்கள் இதோ!

அடுத்து ராஜஸ்ரீ சந்தேகப்பட்டு நேராக வெளியே வந்து தீபாவிடம் நீதான் காப்பாற்றினாயா என்று கேட்க ஆமாம் என்று சொல்ல இந்த விஷயத்தை எக்காரணத்தை கொண்டும் யாரிடம் சொல்லக்கூடாது என்று சொல்லிவிட்டு போகிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv