ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவின் திருமணத்தை நிறுத்த ராஜ ஸ்ரீ செய்யும் சூழ்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

தீபாவின் திருமணத்தை நிறுத்த ராஜ ஸ்ரீ செய்யும் சூழ்ச்சி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

தீபாவின் திருமணத்தை நிறுத்த ராஜ ஸ்ரீ செய்யும் சூழ்ச்சி, அடுத்து நடக்கப் போவது என்ன என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீண்டும் திருமணம் செய்து கொள்வதாக வந்த மாப்பிள்ளையிடம் இந்த திருமணத்தில் எனக்கு சம்மதம் இல்லை. அதனால் நீங்க அம்மா அப்பா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தீபா சொல்ல அனைவரும் ஃபீல் செய்கின்றனர்.

அந்த மாப்பிள்ளை இந்த மாதிரி பெண் வீட்டுக்கு மருமகளாக வர எங்க அம்மாவுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று சொல்லிவிட்டு போகிறார். அடுத்து கார்த்திக் வீட்டில் கார்த்திக் கோயில் பாடிய பெண்ணின் குரலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறான்.

அப்போது ஐஸ்வர்யா தன் கணவன் அருணிம் கார்த்திக்குக்கு தன் சொந்தக்காரப் பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்ல அருண் அம்மாக்கு பிடித்திருந்தால் ஓகே என்று சொல்கிறான். தீபா வீட்டில் அப்பா வாசலில் உட்கார்ந்து இருக்க அனைவரும் காலை கோயிலில் கச்சேரி பாடியதும் ரூபஸ்ரீயின் குரலை பற்றி பெருமையாக பேச அப்பா உள்ளே வந்து பீல் பண்ணுவது என்னுடைய பெண்ணின் குரல் இன்னொரு பொண்ணுக்கு பேசுவதாக சொல்ல ஃபீல் செய்கிறார்.

இப்படியான நிலையில் ஐஸ்வர்யா ராஜஸ்ரீக்கு ஃபோன் செய்து கச்சேரி நடைபெற்றதாக சொல்ல ராஜஸ்ரீ சந்தோசம் ராஜஸ்ரீ தீபா வீட்டுக்கு வந்து நாளை பெரிய வீட்டில் கச்சேரி ரெடியா இரு என்று சொல்லிவிட்டு போய் வெளியே வந்து அண்ணியிடம் பணம் கொடுத்து தீபாவுக்கு எந்த திருமணம் நடக்க கூடாது நீ தான் பார்த்துக்கணும் என்று சொல்லிவிட்டு போக அண்ணியும் சரி என்று சொல்கிறாள்.

Also read... WATCH: மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிக்க ப்ளான் போடும் பரத் - வெளியானது ‘லவ்’ பட டீசர்!

மறுநாள் காலை அபிராமி வீட்டில் அருண், ஆனந்த் என இருவரும் பங்ஷனுக்கான ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்க தீபா வீட்டில் இருந்து புறப்பட அப்போது ஒருவர் வந்து உங்க பெண் அரண்மனை வீட்டில் மருமகளாக போறாள், ராஜகுமாரன் மாப்பிள்ளையா வரப்போறான் என்று சொல்ல அனைவரும் சந்தோஷமடைகின்றனர். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv