ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கரண்ட் கட்டானதால் படபடப்பான கார்த்தி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கரண்ட் கட்டானதால் படபடப்பான கார்த்தி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

கரண்ட் கட்டானதால் படபடப்பான கார்த்தி, தீபாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி  என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் கார்த்திகை தீபம். இன்றைய எபிசோடில் தீபா பாடிக்கொண்டிருக்க, ரூபா ஸ்ரீ வாய் அசைக்க அதை கார்த்திக் பார்த்துக் கொண்டிருக்க பாட்டு முடிய அனைவரும் கைத்தட்ட கார்த்திக் ரசிக்க தீபா பீலாக அனைவரும் கைதட்டுவதை பார்க்கிறார். அப்போது கார்த்திக்கு போன் வர கார்த்திக் பேசிக் கொண்டிருக்க தீபா ராஜேஷ் ரூபஸ்ரீ கார்த்தியை கிராஸ் செய்து கொண்டு போக தீபாக்கு போன் வருகிறது.

அந்த போனில் ஹாஸ்பிடலில் ஒரு பெண் குழந்தைக்கு ரத்தம் கொடுக்க கூப்பிட தீபா போவது ஹாஸ்பிடல் கார்த்திக்கும் வர அங்கு அவன் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளியின் குழந்தைக்கு ரத்தம் தேவைப்பட கார்த்திக் ரத்தம் கொடுப்பது அதே இடத்திற்கு தீபாவும் வருவது அதே பெண் குழந்தைக்கு தீபா ரத்தம் கொடுக்க தீபாவின் கர்சீஃப் கார்த்தியின் கைக்கு கிடைக்கிறது.

தீபா வீட்டுக்கு வந்து கொண்டிருக்க தீபாவின் அண்ணன் உன்னை பெண் பார்க்க ஆள் வந்ததாக சொல்லி அழைத்து செல்ல ஃபேக்டரியில் கார்த்திக் தனக்கு கிடைத்த பரிசை தொழிலாளிகளிடம் கொடுத்து இதற்கு நீங்கள் தான் காரணம் என்று சொல்ல தொழிலாளர் அனைவரும் கைத்தட்டி கார்த்திகை பாராட்டுகின்றனர்.

அப்போது கரண்ட் கட் பண்ண கார்த்திக்கு ஒரு மாதிரியாக படபடப்பாக மாற ஃப்ளாஷ் பேக்கில் சிறு வயதில் இருட்டில் அடைபட்ட கார்த்திக்கின் குழந்தை பருவ சம்பவம் காட்டப்படுகிறது.

Also read... வணங்கானில் சூர்யாவிற்கு பதில் பாலா தேர்வு செய்த நடிகர் இவரா? இணையத்தில் வைரலாகும் தகவல்

திரும்பி கரண்ட் வர கார்த்திக் சாதாரணமாக மாறி வீட்டுக்கு கிளம்பும் போது பெண் பார்க்க வருவதால் தீபா வீட்டில் ரெடி ஆகிறாள். அப்போது தீபாவின் அண்ணி மைதிலி ராஜஸ்ரீக்கு ஃபோன் பண்ணி பெண் பார்க்க வந்த விஷயத்தை சொல்ல ராஜஸ்ரீ நல்லபடியா நடந்தா எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொல் என்று சொல்கிறாள்.

அடுத்து மாப்பிள்ளை வீட்டுக்காரர் அனைவரும் காத்திருக்க தீபா வர மாப்பிள்ளை வீட்டின் அம்மா அப்பா தீபாவின் கலரையும் கருப்பு உருவத்தை பார்த்து கருப்பான பெண் எங்களுக்கு மருமகளா வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு போக தீபா வருத்தப்படுகிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv