முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கார்த்தி கையில் சிக்கிய தீபா எழுதிய லெட்டர் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்தி கையில் சிக்கிய தீபா எழுதிய லெட்டர் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்தி கையில் சிக்கிய தீபா எழுதிய லெட்டர், அடுத்து நடந்தது என்ன என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். நட்சத்திராவுடன் கார்த்திக்கு பதிவு திருமணம் செய்ய முடிவெடுத்து அபிராமி குடும்பம் பல தடங்கல்களை தாண்டி கிளம்பி செல்கின்றனர்.

இந்த நிலையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எல்லோரும் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் பஞ்சராகி நடுரோட்டில் நிற்கிறது. இதனால் மெக்கானிக்கை கூப்பிட்டு காரை சரி செய்யும் வேலையில் இறங்குகின்றனர்.

இந்த நேரத்தில் கார்த்தி தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் ஏதோ பேப்பர் இருப்பதை பார்த்து அதை வெளியே எடுக்கிறான். பேப்பரை பிரித்து தீபா நட்சத்திரா குறித்து எழுதி இருக்கும் விஷயத்தை படிக்க போகும் நிலையில் கார் ரெடியாகி விட்டதாக சொல்கின்றனர்.

இதனால் கார்த்தி அந்த லெட்டரை படிக்காமல் கிளம்பி போகிறான். அடுத்து ரெஜிஸ்டர் ஆபிஸில் நட்சத்திரா அப்பா அம்மா இல்லாமல் தனியாக வந்து நிற்கிறாள். அபிராமி குடும்பம் அதுபற்றி கேட்க முதலில் அவர்கள் வர மாட்டார்கள் என்று சொல்லும் நட்சத்திரா அதன் பிறகு லேட்டாக வருவார்கள் என்று சொல்கிறாள்.

மேலும் அதுவரைக்கும் காத்திருக்க வேண்டாம், நாம் கல்யாணத்தை முடித்து விடலாம் என சொல்கிறாள். சரி என ரெஜிஸ்டர் ஆபிஸில் கார்த்தி கையெழுத்து போட போகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? இந்த கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv