ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நட்சத்திராவை காலில் பாம்பு கொட்டியதை தொடர்ந்து நிலா பார்க்கும் ஃபங்ஷனில் கார்த்தி தீபாவின் முகத்தை பார்க்கும்படி அமைந்தது.
இதை அடுத்து மீனாட்சி தீபாவை சந்தித்து பார்த்தியா நான் சொன்ன மாதிரி நடந்திடுச்சு என சொல்ல தீபா மீனாட்சி காலில் விழுந்து தயவு செய்து இதைப்பற்றி யார்கிட்டயும் சொல்லாதீங்க. ஏற்கனவே அபிராமி அம்மா என் மேல ஏகப்பட்ட கோபத்துல இருக்காங்க, ஐஸ்வர்யா அம்மா நான் பணத்துக்காக தான் கார்த்தி சார் பின்னாடி சுத்திகிட்டு இருக்கேன்னு சொல்றாங்க. என்கிட்ட இருக்கிறது தன்மானம் மட்டும் தான் அதையும் இழக்க வச்சிடாதீங்க என கெஞ்சுகிறாள்.
இதனால் மீனாட்சி யாரிடமும் இந்த விஷயத்தை சொல்ல மாட்டேன் என வாக்கு கொடுத்துவிட்டு சாமியிடம் சென்று எப்படியாவது தீபாவை இந்த வீட்டு மருமகளாக கொண்டு வந்தது என வேண்டுகிறாள். அதன் பிறகு கார்த்திக் நிலவு பார்குற பங்ஷனில் நீங்க எப்படி வந்தீங்க? நல்லவேளை உங்கள யாரும் பார்க்கல என சொல்ல தீபா பாம்பு வந்து விட்டதால் அதை பார்த்து பயந்து ஓடி வந்தேன் என சொல்கிறாள்.
அடுத்ததாக நட்சத்திராவை பரிசோதனை செய்த டாக்டர் பயப்படும்படி எதுவும் இல்லை என சொல்ல எல்லோரும் நிம்மதி அடைந்தனர். அடுத்து கார்த்தி மற்றும் தீபா பேசிக் கொண்டிருக்கும் போது கார்த்திக்கு திடீரென விக்கல் வர உங்களை யாரோ நினைக்கிறார்கள் என தீபா சொல்கிறாள்.
அதற்கேற்றார் போல அபிராமி தன்னுடைய ரூமில் கார்த்தியின் திருமணத்தில் தொடர்ந்து தடங்கல்கள் ஏற்படுகிறது நாளைக்கு ஜோசியரை சந்தித்து இது பற்றி பேச வேண்டும் என முடிவெடுக்கிறாள். மறுநாள் ஜோசியரை சென்று சந்திக்க கண்டிப்பாக இந்த பொண்ணு உங்க வீட்டு மருமகளா வருவா, ரொம்ப நல்ல ஜாதகம் என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv