முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நகையால் ஷாக்கான நட்சத்திரா.. தீபாவுக்கு சவால் விட்ட மீனாட்சி - 'கார்த்திகை தீபம்' சீரியல் அப்டேட்!

நகையால் ஷாக்கான நட்சத்திரா.. தீபாவுக்கு சவால் விட்ட மீனாட்சி - 'கார்த்திகை தீபம்' சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

அபிராமியிடம் சிக்க போகும் நட்சத்திரா, தீபாவுக்கு சவால் விட்ட மீனாட்சி என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நட்சத்திரா அபிராமி வீட்டில் பரம்பரை நகை காணாமல் போன விஷயம் பற்றி பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் கார்த்திக் நகையை எடுத்து காட்ட அனைவரும் சந்தோஷப்பட நட்சத்திரா அதிர்ச்சி அடைகிறாள்.

ஆனாலும் கார்த்தி நடந்த விஷயங்கள் எதுவும் சொல்லாமல் வேறு மாதிரி மாற்றி சொல்ல அபிராமி அந்த நகையை மீண்டும் நட்சத்திராவிடம் கொடுக்க மீனாட்சி தடுத்து நிறுத்துகிறாள். ஏற்கனவே நகை காணாமல் போய் மீண்டும் கிடைத்துள்ளது. ஆகையால் இது இப்போதைக்கு நம்மிடமே இருக்கட்டும் என சொல்ல அபிராமியும் அதற்கு சம்மதிக்கிறாள்.

அடுத்து கார்த்தி நட்சத்திராவிடம் தனியாக பேச வேண்டும் என அவளை அழைத்து செல்ல நட்சத்திரா காலேஜில் படிக்கும் போது கதிரை காதலித்ததாகவும் அதன் பிறகு பிரேக்கப் செய்து விட்டதாக சொல்கிறாள்.

நமக்கு நிச்சயம் ஆன பிறகு அவன் மீண்டும் ப்ரோபோஸ் செய்ய நான் அதனை மறுத்து விட்டேன், பிறகு தான் திருந்தி விட்டதாக சொல்லி என்னிடம் பேச வேண்டும் என சொன்னான். நான் அங்கே போன போது அவன் உன்னை கார்த்தியுடன் சேர விட மாட்டேன் என சொல்லி நகையை பறித்து கொண்டு ஓடி விட்டதாக சொல்கிறாள்.

அத்தைக்கு இதெல்லாம் தெரிந்தால் அவர்கள் சங்கடபடுவார்கள் என்று தான் சொல்லவில்லை என சமாளித்து கார்த்தியையும் இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கிறாள்.

இப்படியான நிலையில் மீனாட்சி தீபாவிடம் பரம்பரை நகையை கொடுக்க அவள் வாங்க மறுக்க நீயும் கார்த்தியும் சேர போறீங்க, என் உள் மனசு அது தான் சொல்லுது என பேச தீபா அப்படி எதுவும் இல்லை என சமாளிக்கிறாள்.

அதன் பிறகு மீனாட்சி இன்னைக்கு நடக்குற நிலா பார்க்கும் பங்ஷனில் கார்த்தி உன் முகத்தை தான் பார்ப்பான் என சொல்லி சவால் விடுகிறாள். மறுபக்கம் நட்சத்திரா தனது காதலனை தனியாக சந்தித்து கூடிய சீக்கிரம் கார்த்தியை பதிவு திருமணம் செய்ய போவதாக சொல்கிறாள்.

அதுவரைக்கும் நீ வேற ஊருக்கு போய் விடு என சொல்லி அனுப்ப கதிர் அங்கிருந்து கிளம்புகிறான். அபிராமி தனது அண்ணனிடம் இந்த நிலவு பார்குற பங்ஷன் நல்லபடியா நடக்கணும் என பேசிக் கொண்டிருக்க கதிர் காரின் எதிரே விழுந்து விபத்தில் சிக்குகிறான்.

ஆபத்தான நிலையில் அவனை அபிராமி மருத்துவமனையில் அனுமதிக்க அவளது அண்ணன் அவன் போனில் டார்லிங் என சேவ் செய்து வைத்திருக்கும் நட்சத்திராவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறாள். இதனால் நட்சத்திரா மருத்துவமனைக்கு கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv