முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / போன்நம்பரால் குழப்பம்.. கார்த்தியிடம் சிக்கிய நட்சத்திராவின் காதலன் - பரபர கட்டத்தில் கார்த்திகை தீபம் சீரியல்!

போன்நம்பரால் குழப்பம்.. கார்த்தியிடம் சிக்கிய நட்சத்திராவின் காதலன் - பரபர கட்டத்தில் கார்த்திகை தீபம் சீரியல்!

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்தியிடம் சிக்கிய நட்சத்திராவின் காதலன், அபிராமிக்கு காத்திருந்த அதிர்ச்சி என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நட்சத்திரா தனது காதலனன் கதிருடன் ரூமில் இருக்கும் போது கார்த்திக் வந்து காலிங் பெல் அடிக்க கதிர் கதவை திறந்து யாரென கேட்க கார்த்தி இந்த போன் நம்பர் உங்களுடையதா? என கேட்க இல்லை என சொல்கிறான்.

இந்த நம்பர் இந்த அட்ரெஸ்ல தான் இருக்கு என சொல்ல இதுக்கு முன்னாடி இருந்தவங்களாக இருக்கும் என சொல்ல கார்த்திக்கு சந்தேகம் வருகிறது. அடுத்து கார்த்தி அந்த நம்பருக்கு போன் போட கதிர் போன் ரிங்காக கார்த்தி அவனை பிடிக்க போக அவன் தப்பி ஓடுகிறான்.

ஒருகட்டத்தில் கார்த்தி அவனை பிடித்து விசாரிக்க அவன் உண்மையை சொல்ல வரும் நேரத்தில் நட்சத்திரா காரில் வேகமாக வந்து கதிரை காப்பாற்றுகிறாள். மறுப்பக்கம் மீனாட்சி தீபாவிடம் கார்த்தி மீதான காதல் பற்றி கேட்க எனக்கு தான் ஆசை இருந்தது, அவருக்கு இருக்கானு கூட எனக்கு தெரியாது, அவர் இல்லைனு சொல்லிட்டா எனக்கு மனசு கஷ்டமா போயிடும், இதை இப்படியே விட்டு விடுங்கள் என சொல்கிறாள்.

பிறகு இந்த பக்கம் கார்த்திக் கதிரின் ரூமுக்குள் சென்று தேட அவனுக்கு நட்சத்திராவுக்கு கொடுத்த பரம்பரை செயின் மற்றும் நட்சத்திரா தனது காதலுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கிறது.

கார்த்தியின் கையில் கிடைத்த ஆதாரம் காரணமாக நட்சத்திரா அபிராமி வீட்டுக்கு வந்து நீங்க கொடுத்த பரம்பரை செயின் காணாமல் போய் விட்டது, எனக்கு ஒரு காதலன் இருந்தான், அவன் கூட இதை எடுத்து இருக்கலாம் என சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகி அவளை திட்டுகின்றனர்.

இந்த நேரத்தில் கார்த்தி பரம்பரை செயினை எடுத்து காட்டி அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv