ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கார்த்திகிடம் நட்சத்திரா பற்றிய உண்மையை கூறினாளா தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகிடம் நட்சத்திரா பற்றிய உண்மையை கூறினாளா தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

கார்த்திகிடம் நட்சத்திரா பற்றி சொல்ல வந்த தீபா, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் அடுத்து நடக்கப்போவது என்ன என கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திக் வீட்டில் பந்தக்கால் நடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க கார்த்திக் தீபாவிற்கு ஃபோன் செய்து நேற்று ரெஸ்டாரண்டில் ஏதோ என்னிடம் சொல்ல வந்தீர்கள் என்ன விஷயம் என்று கேட்க தீபா நட்சத்திராவை பற்றி சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்கிறாள்.

உடனே கார்த்திக் தயங்காமல் சொல்லுங்கள் என்று சொல்ல தீபா சொல்லும் போது உடனே தீபாவின் அண்ணி மைதிலி போன் பிடுங்கி யார் என்று கேட்டு சத்தம் போடுகிறாள். தயவு செய்து இனிமே தீபாவிற்கு ஃபோன் செய்யாதீர்கள் என்று போனை வைக்க சொல்கிறாள்.

மறுபக்கம் அபிராமி வீட்டு வேலைக்காரி திலகா மளிகை கடையில் பந்தக்கால் நட தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருக்க தவறுதலாக நவதானிய பாக்கெட்டை அங்கே வைத்து விட்டு வந்து விடுகிறாள்.

வீட்டில் பந்தகாலுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க ஐயர் பூஜைக்கான நவதானிய பாக்கெட்டை தேட அது இல்லாமல் இருக்க அபிராமி கோபப்பட்டு திலகாவிடம் சத்தம் போடுகிறாள்.

அப்போது அதே மளிகை கடைக்கு தீபாவ வர தீபாவிடம் கடை அண்ணாச்சி அந்த நவதானிய பாக்கெட்டை கொடுக்க அது தனது இல்லை என்று சொல்ல உடனே அண்ணாச்சி அபிராமி வீட்டுக்கு போன் செய்து மீனாட்சியிடம் பேசுகிறார்.

மீனாட்சி அங்கு இருக்கும் யாரிடமாவது நவதானிய பாக்கெட்டை கொடுத்து விட சொல்ல அப்போது அங்கே யாரும் இல்லாமல் இருக்க சூழ்நிலையை புரிந்து கொண்ட தீபா நான் கொண்டு போகிறேன் என்று சொல்கிறாள். உடனே அண்ணாச்சியும் ஒரு பொண்ணு கொண்டு வராங்க என்று சொல்ல மீனாட்சி அத்தையிடம் ஒரு பொண்ணு கிட்ட அண்ணாச்சி கொடுத்துவிட்டு இருக்காரு இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த பொண்ணு வந்துருவா என்று சொல்ல பூஜைக்கான ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த பக்கம் தீபா ஒரு ஆட்டோவில் வந்து இறங்க தீபாவை பார்த்தவுடன் அபிராமி ஷாக் ஆகிறாள். அபிராமியிடம் நவதானிய பாக்கெட்டை கொடுக்க அது ஐயரிடம் கொடுக்கிறார்.

பின்னர் ஐயர் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்வது தீபா கிளம்ப அருணாச்சலம் நீயும் இருந்து இந்த பங்க்ஷன்ல கலந்துக்குமா என்று சொல்ல அபிராமி கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Also read... துணிவு, வாரிசு படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட்ட தியேட்டர்களுக்கு நோட்டீஸ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv