ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவின் திருமணத்திற்காக தட்டை மாற்றிய குடும்பம் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

தீபாவின் திருமணத்திற்காக தட்டை மாற்றிய குடும்பம் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

தீபாவின் திருமணத்திற்காக தட்டை மாற்றிய குடும்பம், ராஜ ஸ்ரீ கொடுத்த அதிர்ச்சி அடுத்து நடக்க போவது என்ன என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் கார்த்திகை தீபம். சிவா தீபாவை பெண் பார்க்க மாப்பிள்ளையை அழைத்து வந்த நிலையில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போக குடும்பம் மொத்தமும் சந்தோஷப்படுகிறது.

தீபாவிற்கு மாப்பிள்ளை பார்த்த சிவாவிற்கு தீபாவின் அப்பா நன்றி சொல்ல பிறகு இரண்டு குடும்பமும் தட்டை மாற்றுகின்றனர். மறுபக்கம் கார்த்திக் வீட்டில் கார்த்திக் பசியோடு வர மீனாட்சி கார்த்தியிடம் ஐஸ்வர்யா சிஸ்டர் நிகிதா வந்திருக்காங்க அவங்க தான் சமைக்கிறாங்க என்று சொல்ல அனைவரும் சாப்பாட்டுக்காக காத்துக் கொண்டிருக்ஙின்றனர்.

ஐஸ்வர்யா நிக்கிதாவிற்கு சமைக்க தெரியாததால் ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்து அதை அவள் செய்தது போல் மாற்றி டைனிங் டேபிள் வைத்துவிட்டு நிகிதா சமைத்ததாக பொய் சொல்ல அனைவரும் சாப்பிடுகின்றனர். அப்போது வாசலில் ஹோட்டல் பார்சல் கவர் இருக்க வாட்ச்மேன் திட்டிக் கொண்டிருக்க சத்தம் கேட்டு வந்த அபிராமி அதை பார்த்ததும் சந்தேகப்படுகிறாள்.

உடனே நேராக போய் சாப்பாட்டை மோந்து பார்த்து நிகிதாவிடம் உண்மையை சொல் நீ சமைச்சியா இல்ல ஓட்டலில் கொண்டு வந்தாயா என கேட்க வேறு வழி இல்லாமல் நிகிதா தவறை ஒப்புக் கொள்கிறாள். அபிராமி நிகிதாவை திட்டி வீட்டை விட்டு வெளியே போக சொல்ல நிகிதா அப்செட்டாக போக மீனாட்சி சந்தோஷப்படுகிறாள்.

Also read... பச்சைக்கிளி முத்துச்சரம் முதல் அனல் மேலே பனித்துளி படம் வரை... ஆண்ட்ரியாவின் பாடல்கள்!

அடுத்து தர்மலிங்கம் வீட்டில் இருக்க அப்போது ராஜஸ்ரீ நேராக வந்து எதுக்கு தீபாவுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்க என்று கேட்க தர்மலிங்கம் பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுக்காக தான் வேற எதுக்கு என்று சொல்ல கல்யாணத்தை நிறுத்துங்க, ரூபா ஸ்ரீக்காக பாடுவதற்கு நீங்கதான் வாக்குறுதி கொடுத்து இருக்கீங்க, என பேச தர்மலிங்கம் தீபாவுக்கு கல்யாணம் செய்ய போவதாக சொல்ல ராஜ ஸ்ரீ 10 லட்சம் ரூபாய் கொடுத்துட்டு கல்யாணம் பண்ணுங்க என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv