ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தீபாவின் கல்யாணத்துக்கு செக் வைத்த அண்ணி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

தீபாவின் கல்யாணத்துக்கு செக் வைத்த அண்ணி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

அபிராமியிடம் சிக்கிய நிகிதா, தீபாவின் கல்யாணத்துக்கு செக் வைத்த அண்ணி என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் கார்த்திகை தீபம். அபிராமி கோவிலுக்கு சென்றுள்ள நிலையில் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா நிகிதாவை பூஜை ரூம் அழைத்து சென்று அபிராமி அத்தைக்கு பூஜைல சாமி பாட்டு பாடுனா பிடிக்கும் அதனால நீ சாமி பாட்டு பாடு என்று ஐஸ்வர்யா சொல்ல நிகிதா எனக்கு சாமி பாட்டு பாட தெரியாது என்று சொல்கிறாள்.

உடனே ஐஸ்வர்யா நீ வாயசை நான் டேப்ல ஆன் பண்ற என்று சொல்லி taprecorder ஆன் பண்ண பக்தி பாட்டு பாடுவது அதற்கு நிகிதா வாய் அசைக்க அனைவரும் வந்து பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.

அப்போது அபிராமி வர அபிராமியும் பாட்டு நன்றாக பாடுவதாக சொல்லி பாராட்ட அப்போது மீனாட்சி அதை கவனித்து டேப் ரெக்கார்டரை ஆப் செய்ய நிகிதா மாட்டிக் கொள்கிறாள்.  அபிராமி சத்தம் போட ஐஸ்வர்யா சமாளித்து அவளுக்கு தொண்டை சரியில்லை அதனால்தான் சரியாக பாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு நிகிதா நன்றாக சமைப்பாள் என்று சொல்லி கிச்சனுக்கு அழைத்து செல்கிறாள்.

சிவா ஒரு மாப்பிள்ளையுடன் தீபாவை பெண் பார்க்க வர அப்பா அம்மா சந்தோஷப்படுகின்றனர். தீபா காப்பி கொடுக்க தீபாவிற்கு மாப்பிள்ளை பிடிக்க மாப்பிள்ளைக்கும் தீபாவை பிடித்து போய் சரி என்று சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.

Also read... WATCH: லத்தி படத்திலிருந்து வெளியானது வீரத்துக்கோர் நிறமுண்டு பாடல் லிரிக்கல் வீடியோ!

இதை தீபாவின் அண்ணி மைதிலி ராஜஸ்ரீக்கு போன் செய்து விசயத்தை சொல்ல ராஜஸ்ரீ கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv