ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தோழியின் திருமணத்தில் பாடிய தீபா, குரலை கேட்டு ஓடி வந்த கார்த்தி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

தோழியின் திருமணத்தில் பாடிய தீபா, குரலை கேட்டு ஓடி வந்த கார்த்தி - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

தோழியின் திருமணத்தில் பாடிய தீபா, குரலை கேட்டு ஓடி வந்த கார்த்தி, அடுத்து நடந்தது என்ன என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அபிராமி தன் வீட்டில் புரோக்கர்களை அழைத்து கார்த்திக்கு பெண்பார்க்கும் விஷயத்தை சொல்ல அப்போது கார்த்திக்கின் அப்பா மகனின் விருப்பத்தை கேட்க கார்த்திக் அம்மாவுக்கு எந்த பெண் பிடித்து இருக்கோ அந்த பெண்ணை நான் திருமணம் செய்கிறேன் என்று சொல்கிறான்.

அப்போது கார்த்திக்கு போன் வர உடனே கார்த்திக்கின் அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக கிளம்பி செல்கின்றனர். மறுபக்கம் தீபா ஒரு கல்யாண வீட்டிற்கு வர தன் தோழி கல்யாணம் முடிந்ததற்கு அப்புறம் தீபாவை பாட சொல்ல தீபா மறுக்கிறாள். பிரண்ட்ஸ் அனைவரும் கம்பல் பண்ண தீபாவும் பாட சம்மதிக்கிறாள்.

அப்போது ஃபேக்டரியை பார்க்க வரும் கார்த்திக், அருண், ஆனந்த் வண்டி ரிப்பேராய் நிற்க இறங்கி இருக்கும்போது அந்த பக்கம் வரும் ராஜஸ்ரீ கார்த்திகை விசாரிக்கிறாள்.

சரியாக இந்த சமயத்தில் தீபா பாட ஆரம்பிக்க தீபா பாட்டு சத்தம் அவளுக்கு கேட்க உடனே ராஜஸ்ரீ அதிர்ச்சியாகிறாள். தன் பெண் பாடவில்லை இது தீபாவின் குரல் என்பதால் கார்த்தி அதை கேட்காமல் இருக்க கார் ரிப்பேர் ஆனது பற்றி கேட்டு ராஜ ஸ்ரீ சமாளிக்கிறாள்.

ஆனாலும் கார்த்திக் பாடும் குரல் வரும் திசை நோக்கி நகர ராஜ ஸ்ரீ வேறொரு பக்கமாக ஓடி வர தீபா பாடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.

Also read... மீண்டும் ஷூட்டிங்கை தொடங்கியது சூர்யா - 42 படக்குழு!

உடனே கார்த்திக்கும் அந்த இடத்திற்கு வர தீபா அதற்குள் பாடி முடித்து விடுகிறாள். பிறகு கார்த்திக்கும் தீபாவும் சந்தித்துக் கொள்கின்றனர்.  கார்த்திகேயன் ரூபா ஸ்ரீ குரல் பற்றி விசாரிக்க தீபா அவர்கள் பாடி சென்று விட்டார்கள் என்று சமாளிக்கிறாள்.

அப்போது பாதை தெரியாமல் கார்த்திக் முழிக்க தீபா நான் பாதை காட்டுகிறேன் அழைத்துச் செல்ல அப்போது அந்தப் பக்கம் ஒரு வயசான பாட்டி கார்த்திகை தீபாவின் மாப்பிள்ளை என்று சொல்லி பெருமையாக பேசிட்டு போக தீபா அந்த பாட்டிக்காக மன்னிப்பு கேட்க கார்த்திக்கும் சரி என்று சொல்லிவிட்டு பிரிந்து செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv