முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீபா மீது வந்த சந்தேகம்... கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

தீபா மீது வந்த சந்தேகம்... கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

தீபா மீது வந்த சந்தேகம், உண்மையை மறைக்கும் ராஜ ஸ்ரீ, நடந்தது என்ன என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியல் கார்த்திகை தீபம். இன்றைய எபிசோடில், மயக்கத்தில் இருக்கும் கார்த்திக்கை டாக்டர் செக் செய்து நார்மல் என்று சொல்ல அவனுக்கு இருட்டு என்றால் ஏன் பயம் என்று கேட்க அபிராமி சிறுவயதில் பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு ரவுடிகள் அவனை இருட்டு ரூமில் அடைத்து விட்டார்கள். அதிலிருந்து அவனுக்கு இருட்டு என்றால் பயம் அதனால் தான் நாங்கள் வீட்டில் அவனை பத்திரமாக பார்த்துக்கொள்கிறோம் என்று அபிராமி பீல் செய்து பேசுகிறாள்.

அப்போது கண் விழிக்கும் கார்த்தி தன்னை ஒரு பெண் காப்பாற்றிய விஷயத்தை சொல்ல அபிராமி யார் என்று கேட்க தெரியவில்லை என்று சொல்ல ராஜஸ்ரீ சந்தேகம் அடைகிறாள்‌. உடனே வெளியே வந்து தீபாவிடம் விசாரிக்க தீபா தான் காப்பாற்றினதாக சொல்ல இதை யாரிடம் சொல்லாதே பெரிய பணக்கார குடும்ப பிரச்சனை என்று சொல்லி ராஜஸ்ரீ தீபாவை ஆப் செய்கிறாள்.

அடுத்து, அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க தீபா தன் தம்பிக்காக ஸ்வீட் கேட்க சர்வர் தர மாட்டேன் என்று திட்ட அந்த பக்கம் வந்த மீனாட்சி சர்வரை திட்டி விட்டு தீபாவுக்கு ஸ்வீட் கொடுக்கிறாள். அதை எடுத்துக் கொண்டு வரும்போது எதிர்ச்சியாக சிவாவை இடித்து விட சிவா தீபாவை பாரத்ததும் அவனுக்கு தங்கை ஞாபகம் ஏற்படுகிறது.

Also read... பிரபல இணையதளம் வெளியிட்ட டாப் 10 இந்திய திரைப்படங்கள்...!

பின்னர் ராஜஸ்ரீயின் கார் ரிப்பேர் ஆகி நிற்கும்போது, அந்தப் பக்கம் வரும் சிவா தான் டிராப் செய்வதாக சொல்லி ராஜஸ்ரீ மற்றும் தீபாவை அழைத்துக் கொண்டு தீபா வீட்டிற்கு போகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv