முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தீபாவின் கடிதத்தால் நின்ற கார்த்தியின் திருமணம் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

தீபாவின் கடிதத்தால் நின்ற கார்த்தியின் திருமணம் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

கார்த்திகை தீபம் சீரியல்

கார்த்திகை தீபம் சீரியல்

தீபாவுடன் திருமண கோலத்தில் வந்த கார்த்தி, அதிர்ச்சியான அபிராமி குடும்பம் என கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நட்சத்திராவின் பெற்றோர் வராத காரணத்தினால் அபிராமி அவர்கள் எங்கே என கேட்க நட்சத்திரா வந்து கொண்டிருக்கிறார்கள் டிராபிக் ஜாமில் சிக்கிக்கொண்டிருப்பதால் அவர்கள் வர லேட் ஆகும் அதற்குள் கல்யாணத்தை முடித்து விடலாம் என சொல்ல அபிராமி பெத்தவங்க இல்லாம கல்யாணம் செய்யறது நல்லா இருக்காது என கூறுகிறாள்.

உடனே அருணாச்சலமும் நல்ல நேரம் முடிய போகுது என சொல்லி கல்யாணத்தை நடத்த அபிராமியை சம்மதிக்க வைக்கிறார். பிறகு கார்த்தி மற்றும் நட்சத்திரா என இருவரும் மாலை மாற்றிக்கொள்ள மறுப்பக்கம் தீபா கார்த்தியின் வீட்டில் போட்டோவை பார்த்து பீல் பண்ணியபடி இருக்கிறாள்.

அடுத்து கார்த்தி கையெழுத்து போட போகும் நேரத்தில் அவனுக்கு ஒரு போன் கால் வர போன் பேசுவதற்காக கார்த்தி வெளியே வந்து போனை எடுக்க பாக்கெட்டில் இருந்து தீபா எழுதி வைத்த லெட்டர் கீழே விழுகிறது.

பிறகு தீபா இந்நேரம் கல்யாணம் நடந்து முடிந்திருக்கும் என சோகமாக உட்கார்ந்து இருக்க காரில் கார்த்தியின் குடும்பம் அனைவரும் வந்து இறங்குகின்றனர். நேராக கார்த்தியின் ரூமுக்கு போகும் மீனாட்சி இன்னைக்காவது கார்த்தி கிட்ட உன்னுடைய ஆசையை சொல்லி இருக்கலாம்ல, எல்லாம் முடிஞ்சு போச்சு போ என பேச தீபா கல்யாணம் முடிந்து விட்டது என நினைத்துக் கொள்கிறாள்.

கல்யாணம் நடந்து முடிஞ்சிடுச்சு இனியாவது நட்சத்திரா திருந்தி நல்லபடியாக இருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்டிருக்க அப்போது கார்த்தி உள்ளே என்ட்ரி கொடுக்கிறான். தீபா கல்யாணத்துக்காக வாழ்த்து சொல்ல கார்த்தி எனக்கு கல்யாணமே நடக்கல என ரெஜிஸ்டர் ஆபீஸ் லெட்டரை பார்த்து கல்யாணத்தை நிறுத்திய விஷயத்தை கூறுகிறான். மேலும் யார் அந்த நலம் விரும்பி என்பதுதான் எனக்கு தெரியவில்லை அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என சொல்கிறான்.

மறுநாள் காலையில் கார்த்தி திருமண கோலத்தில் வந்து இறங்க அவனுடன் தீபா கழுத்தில் தாலி உடன் வந்து இறங்க அதை பார்த்து அபிராமி குடும்பம் அதிர்ச்சி அடைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv