Home /News /entertainment /

திருமாறன் முடிவால் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பம் - கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் அப்டேட்

திருமாறன் முடிவால் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பம் - கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் அப்டேட்

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் அப்டேட்

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் அப்டேட்

திருமாறன் மனைவி சாருமதி பெற்ற குழந்தையை விட்டுட்டு அகிலனை அழைத்துக் கொண்டு வீட்டினை விட்டு ஓடி போனாள். போகும் போது எழுதி வைத்த கடிதத்தில் தங்களுக்கு உதவிய ஆதிராவுக்கு நன்றி என குறிப்பிட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    திருமாறன் முடிவால் வீட்டை விட்டு வெளியேறும் குடும்பம், கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் அடுத்து நடக்க போவது என்ன.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால்.

    திருமாறன் மனைவி சாருமதி பெற்ற குழந்தையை விட்டுட்டு அகிலனை அழைத்துக் கொண்டு வீட்டினை விட்டு ஓடி போனாள். போகும் போது எழுதி வைத்த கடிதத்தில் தங்களுக்கு உதவிய ஆதிராவுக்கு நன்றி என குறிப்பிட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கெல்லாம் ஆரம்பத்தில் இருந்தே இந்த கல்யாணத்தில் விருப்பமில்லாமல் இருந்த ஆதிரா தான் காரணம் என தவறாக புரிந்து கொள்ளும் திருமாறன் அவளை பழி வாங்க எதிர்பாராத விதமாக ஆதிரா கழுத்தில் தாலியை கட்டி விடுகிறான்.

    இந்த சூழலில் அடுத்ததாக திருமாறன் இதற்கெல்லாம் சுபத்திரையும் ஆதியாவும் காரணம் என வீட்டை விட்டு வெளியே போக சொல்ல சுபத்திரையுடன் சேர்ந்து ராஜப்பா, சாரதா என எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் தங்கும் நிலை ஏற்படுகிறது. இந்த விஷயம் தெரிந்து பரோலில் வர முடிவு செய்கிறான் மதியழகன்.

    Also read... தனுஷ் பட நடிகை சாரா அலி கானின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

    அடுத்து கோவிலில் சுபத்திரை குங்குமம் வைக்க போக குங்கும சிமிழ் கீழே விழ அதனை தாங்கி பிடிக்கிறான் மதியழகன். அடுத்து குடும்பத்தாரை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறான். மதியழகன் சொன்ன வார்த்தையால் எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கும் சூழல் உருவாக திருமாறன் வீட்டுக்கு நடுவே சுவர் எழுப்பி வீட்டை இரண்டாக பிடிக்கிறான்.

    இதனால் இந்த குடும்பத்தில் அடுத்ததாக நடக்க போவது என்ன? பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா? மதியழகன் அப்படி என்ன சொன்னார் என பரபரப்பான திருப்பங்களுடன் வரும் நாட்களில் சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Entertainment, TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி