ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கனா. இந்த சீரியலில் சென்னை சென்று ஒரு வழியாக விஷ்வாவிடம் பயிற்சி பெற சேர்ந்த அன்பரசி தனது அம்மாவையும் மாமாவையும் பார்க்க ஊருக்கு திரும்பி வந்த நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஊருக்கு வந்த அன்பரசி கடன் தொல்லையால் வீட்டை இழந்து நடுத்தெருவில் நிற்பதை பார்த்து இனி ஓட்டப்பந்தய பயிற்சி வேண்டாம், வேலைக்கு போகலாம் என முடிவெடுக்கிறாள். விஷ்வாவுக்கு போன் போட்டு நான் இனி பயிற்சிக்கு வரவில்லை என சொல்லி போனை வைத்து விடுகிறாள்.
அடுத்து மாமா கடனை அடைப்பதற்காக டைம் கேட்டு கடனை கொடுத்தவரிடம் பேச போக அவர் அன்பரசியை இரண்டாம் தாரமாக கட்டிக் கொடுக்க சொல்ல மாமா சண்டை போட்டு விட்டு வந்து விடுகிறார். அடுத்து அன்பரசி மாணிக்கம் என்பவரை சந்தித்து அவரது மகள் சென்னையில் வேலை செய்யும் கேட்டரிங் ஆபிஸில் தனக்கும் ஒரு வேலை வாங்கி தன் சொல்ல அவரும் 5 வருட அக்ரீமென்ட் போட்டு வேலை வாங்கி தருகிறார்.
இதையடுத்து விஷ்வா தனது அம்மாவின் பிறந்த நாளை பெரிய ஓட்டலில் கொண்டாட ஏற்பாடுகள் செய்ய அன்பரசி அந்த ஓட்டலில் கேட்டரிங் வேலை செய்யும் சூழ்நிலை உருவாகிறது. இந்த ஓட்டலில் இவளை பார்க்கும் அனன்யா அசிங்கப்படுத்தி பேசுகிறாள்.
Also read... ''எப்போதும் பாலா அண்ணா உடன் துணை நிற்போம்''... 'வணங்கான்' விலகல் குறித்து சூர்யாவின் 2D நிறுவனம் பதில்!
இதனையடுத்து விஷ்வா, ஜானகி பாட்டி கண்ணில் படாமல் இருக்க உள்ளேயே மறைந்து மறைந்து வேலை செய்கிறாள் அன்பரசி. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? விஷ்வா அன்பரசியை பார்ப்பானா? அவளது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TV Serial, Zee Tamil Tv