ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இந்திராவின் அக்கா வாழ்க்கைக்கு வரும் சிக்கல் - இந்திரா சீரியல் அப்டேட்!

இந்திராவின் அக்கா வாழ்க்கைக்கு வரும் சிக்கல் - இந்திரா சீரியல் அப்டேட்!

இந்திரா சீரியல்

இந்திரா சீரியல்

இந்திராவின் அக்கா வாழ்க்கைக்கு வரும் சிக்கல், அடுத்து நடக்கப் போவது என்ன என இந்திரா சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது புத்தம் புதிய சீரியல் இந்திரா. முதல் வாரத்தில் எதிலும் துணிச்சலாக இருக்கும் இந்திரா ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்து வருகிறாள். ஆண்களுக்கு நிகராக தைரியமாக இருந்த வரும் இந்திராவின் வாழ்க்கை என்னவாகுமோ என அவளது அப்பா அம்மா பயந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் பேய் இருப்பதாக சொல்லி ஒரு ரோடையே பிளாக் செய்து வைத்து திருடன் ஒருவன் ஊரையே பேய் இருப்பதாக நம்ப வைத்து ஏமாற்றி வந்த நிலையில் இந்திரா தைரியமாக உள்ளே புகுந்து திருடனை கண்டு பிடித்தாள். அடுத்து இந்திராவின் அப்பா அம்மா மூத்த மகள் காவ்யாவுக்கு பணக்கார இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருக்க மாப்பிள்ளையின் அம்மாவான பிரேமி வெங்கட் தனது தங்கையின் மூலமாக வரதட்சணை கேட்க இந்திராவின் அப்பாவும் பணத்தை தயார் செய்ய நகையை அடகு வைக்க கடைக்கு போகும் போது இந்திராவால் பிடிபட்ட திருடன் நகையை திருடி விடுகிறான்.

இதையடுத்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது இந்த விஷயம் இந்திராவுக்கு தெரிய அவள் அந்த திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்து நகையை மீட்டெடுத்து அப்பாவிடம் கொடுக்க நகை எப்படி கிடைத்து என கேட்க நடந்த விஷயங்களை சொல்கிறார். அடுத்து ராகினி இந்திரா வீட்டில் வரதட்சணை கொடுத்தால் தான் கல்யாணம் நடக்கும் என மிரட்ட முதல் முறையாக இந்த விசயம் இந்திராவுக்கு தெரிய வருகிறது.

Also read... புடவையில் கிறங்கடிக்கும் நடிகை மாதுரி தீட்சித்தின் நியூ ஆல்பம்!

இந்திரா வரதட்சணை எல்லாம் கொடுக்க முடியாது என பேச சந்தர்ப்ப சூழ்நிலையால் மாப்பிள்ளையின் அம்மா ஜெயா வரதட்சணை வேண்டாம் என பேச்சுக்கு சொல்லி இந்திராவை பகையாளியாக பார்க்கிறாள். கல்யாணம் முடிந்ததும் இந்திரா குடும்பத்தை பழி தீர்க்க முடிவு செய்கிறாள்.

கல்யாணம் முடிந்ததும் ராகினி இனி தான் உனக்கு இருக்கு என மிரட்ட அடுத்து இந்திரா என்ன செய்ய போகிறாள்? இரண்டு குடும்பத்துக்கும் இடையே நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: TV Serial, Zee Tamil Tv