Home /News /entertainment /

மித்ரா - வினய் காதல் வாழ்க்கைக்குள் குறுக்கிடும் தீபிகா - தெய்வம் தந்த பூவே சீரியல் அப்டேட்

மித்ரா - வினய் காதல் வாழ்க்கைக்குள் குறுக்கிடும் தீபிகா - தெய்வம் தந்த பூவே சீரியல் அப்டேட்

தெய்வம் தந்த பூவே

தெய்வம் தந்த பூவே

வினய், மித்ரா கல்யாண கதையை அறிந்து கொண்ட தீபிகா மித்ராவை விரட்டி விட்டு வினயுடன் சேர்ந்து வாழ திட்டம் போடுகிறாள்.

  • News18
  • Last Updated :
    கேன்சரில் இருந்து கணவனை மித்ரா பாடுபட்டு மீட்டெடுக்க அவரது வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்த வந்துள்ளார் தீபிகா.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தெய்வம் தந்த பூவே. அப்பா ராஜேந்திரன் கந்துவட்டிக்கு பணம் வாங்கி கஷ்டப்பட்ட நிலையில் குடும்பத்துக்காக சென்னை வந்த மித்ரா எதிர்பாராத சூழ்நிலையில் தவறாக விபச்சார வழக்கில் கைதாகி அதன் பின்னர் அதிலிருந்து ஒரு வழியாக மீண்டு வந்தார்.

    இதன்பிறகு டாக்டர் ராம்கி உதவியால் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த ராம்கி மகன் வினய்க்கு அவனது காதலியுடன் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடக்க அந்த சமயத்தில் வினய்க்கு கேன்சர் என தெரிய வந்ததும் நிச்சயம் நின்று போகிறது.

    இப்படியான சூழலில் வினயின் அம்மா வாசுகி மகனுக்கு திருமணம் நடந்தால் அவன் குணமாகி விடுவான் என நம்புகிறாள். ஆனால் வினயை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வராத நிலையில் 6 மாத அக்ரீமென்ட்டுடன் மகனை திருமணம் செய்து கொள்ளுமாறு ராம்கி மித்ராவை அணுக குடும்ப சூழ்நிலை காரணமாக அவளும் இதற்கு ஓப்பு கொண்டு வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு மரண படுக்கைக்கு போன கணவனை கேன்சரில் இருந்து மீட்டு கொண்டு வந்தாள்.

    பிறகு மித்ரா வீட்டுக்கு அனைத்து விஷயங்களும் தெரிய வர விவகாரம் பிரச்சனையாக வெடித்து பிறகு ஒரு வழியாக இரண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்துள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து வினய் வீட்டுக்கு வந்துள்ளார் வினயின் நெருங்கிய தோழி தீபிகா.

    Also read... ரவிக்காக வீட்டை விற்க முடிவெடுத்த மார்க்... தவமாய் தவமிருந்து சீரியல் அப்டேட்

    வினய், மித்ரா கல்யாண கதையை அறிந்து கொண்ட தீபிகா மித்ராவை விரட்டி விட்டு வினயுடன் சேர்ந்து வாழ திட்டம் போடுகிறாள். இதனால் அடுத்ததாக மித்ரா வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன? வினய், மித்ரா வாழ்க்கையில் வரப் போகும் பிரச்சனைகள் என்ன? என விறுவிறுப்பான கதைகளத்தை நோக்கி பயனிக்க உள்ளது தெய்வம் தந்த பூவே சீரியல்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி