Home /News /entertainment /

டான்ஸ் ஜோடி டான்சில் இந்த வாரம் ரோல் ரிவர்ஸ் ரவுண்ட் - திக்குமுக்காட வைக்கும் போட்டியாளர்கள்

டான்ஸ் ஜோடி டான்சில் இந்த வாரம் ரோல் ரிவர்ஸ் ரவுண்ட் - திக்குமுக்காட வைக்கும் போட்டியாளர்கள்

டான்ஸ் ஜோடி டான்ஸ்

டான்ஸ் ஜோடி டான்ஸ்

டான்ஸ் ஜோடி டான்சில் இந்த வாரம் ரோல் ரிவர்ஸ் ரவுண்ட்டில் திக்குமுக்காட வைக்கும் போட்டியாளர்கள்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு தினங்களில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். சாமானிய மக்களில் 12 போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுடன் 12 சின்னத்திரை பிரபலங்கள் ஜோடி போட்டு நடனமாடி வரும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

    தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனை மிர்ச்சி விஜய் தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா, சங்கீதா உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்று போட்டியாளர்களை மதிப்பிட்டு வருகின்றனர்.

    கடந்த வாரம் நினைத்தாலே இனிக்கும் ரவுண்டில் 80's மற்றும் 90's பாடல்களுக்கு போட்டியாளர்கள் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வாரம் ரோல் ரிவர்ஸ் ரவுண்ட் நடைபெற இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    அதாவது ஆண்கள் பெண்ணாகவும் பெண்கள் ஆணாகவும் மாறி நடனமாட உள்ளனர். ஒவ்வொரு போட்டியாளரும் மாறு வேடத்தில் மரண மாஸ் பர்பாமென்ஸ் கொடுக்க ரசிகர்களுக்கு இந்த வாரம் நிச்சயம் ஸ்பெஷல் கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Also read... இணையத்தில் வைரலாகும் ரஜினி வாக்கிங் செல்லும் வீடியோ!

    மேலும் ஏற்கனவே சுகி விஜய், நம்ரைதா ஜோடி வெளியேறிய நிலையில் மீதமுள்ள 11 ஜோடிகளில் கோல்டன் பர்பாமென்ஸை வெல்ல போவது யார் யார்? வெளியேற போவது யார் என்பது இந்த வார எபிசோடுகளில் தெரியவரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Zee Tamil Tv

    அடுத்த செய்தி