ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பழனி செய்த வேலையால் கைதாக போகும் செந்தில்? - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

பழனி செய்த வேலையால் கைதாக போகும் செந்தில்? - அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல்

பழனி செய்த வேலையால் கைதாக போகும் செந்தில்? அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் அமுதாவையும், உமாவையும் அலங்கரித்து ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து செல்ல

  நாகுவின் தம்பி கண்ணன் தண்ணி அடித்தபடி அமுதாவை எப்படியாவது கல்யாணம் செய்து விட வேண்டும் என திட்டமிடுகிறான்.

  அடுத்து ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருக்க, நாகுவிற்கு கண்ணன் போன் செய்து நாகுவிடம் தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாக சொல்கிறான். ஊர்வலத்தில் செந்திலும், அமுதாவும் சந்தோஷமாக வருவதை பார்த்து உமாவும் பழனியும் எரிச்சலாகின்றனர்.

  செந்தில் துரையை அடிக்கும் போது எடுத்த வீடியோவை பழனி போலீசுக்கு அனுப்ப போலீஸ் வீடியோவை பார்க்கின்றனர். அடுத்து அமுதா கார் ரிப்பேர் ஆகி நிற்க உமா சந்தோஷம் அடைகிறாள்.

  சிதம்பரமும், இளங்கோவும் இறங்கி காரை தள்ள அமுதா சந்தோஷம் அடைய உமா கோபம் கொள்கிறாள்.

  Also read... குந்தவை த்ரிஷா தெரியும், குந்தவி வைஜயந்திமாலா தெரியுமா?

  இரு தம்பதிகளும் மண்டபத்திற்கு வந்து இறங்க , மணமக்களுக்கு கோமதி இடது பக்கமாக ஆரத்தி எடுக்க சிதம்பரம் கோபத்துடன் கோமதியை திட்ட, அன்னலட்சுமி ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்துச் செல்கிறாள்.

  மண்டப வாசலில் செந்தில் பி.எ.,பி.எட் என பெயர் போட்டிருக்க அமுதா சந்தோஷப்பட உமா வன்மமாக பார்த்து சிரிக்கிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: TV Serial, Zee Tamil Tv